ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் பிரபலம் திடீர் மரணம்... வருத்தத்தை தெரிவிக்கும் முன்னணி நடிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த பல சீரியல்களை இயக்கிய இயக்குனர் தாய் செல்வம் திடீரென மரணமடைந்து இருக்கிறார்.
சீரியலில் மட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாம் விதி என்ற திரைப்படத்தின் இயக்குனராகவும் தாய் செல்வம் தான் இருந்திருக்கிறார்.

இயக்குனரின் திடீர் மரணம்
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இயக்குனராக இருந்த தாய் செல்வம் தற்போது திடீரென மரணமடைந்திருக்கிறார். இவருடைய மரணம் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிரபலங்கள் பலருக்கும் இந்த செய்தி ஏற்க முடியாத ஒரு சோகமாக தான் இருந்து வருகிறது என பல சின்னத்திரை பிரபலங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

மௌன ராகம் இயக்குனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் சீசன் ஒன்றில் முழுக்க இவர்தான் தாய் செல்வம் தான் அந்த சீரியலை முழுமையாக இயக்கி வந்திருக்கிறாராம். இந்த நிலையில் அவருடைய இறப்பு குறித்து அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரவீனா தாஹே இயக்குனர் தாய் செல்வம் மறைவு ஒரு பேரிழப்பு என்று வருத்தமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் வருத்தம்
ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்கும் தினேஷ் கார்த்திக் ஆழ்ந்த அனுதாபங்கள் சாந்தி அடையுங்கள் ஐயா எங்கள் அன்புக்குரிய இயக்குனர் தாய் செல்வம் ஐயா இனி உங்களை நாங்கள் போற்றுவோம் அதிக நினைவுகளையும், மதிப்புகளையும் எங்களிடம் விட்டு சென்றிருக்கிறீர்கள் என்று உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் திரவியம் வருத்தம்
அதே நேரத்தில் ஈரமான ரோஜாவே சீரியலில் இரண்டு சீசன்களிலும் கதாநாயகனாக நடிக்கும் திரவியம் எங்கள் தாய் செல்வம் சார் மறைவு என்பது அதிர்ச்சியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதாகவும் தான் இருந்து வருகிறது. இந்த செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். இனி நீங்கள் இல்லை என்பதை நம்ப முடியவில்லை என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்களும் இவருடைய மறைவுக்கு வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications