வடிவேலு எல்லாம் ஒரு நடிகரா..? எதிர்நீச்சல் "மாரிமுத்து” டுவிஸ்ட்.. அந்த "ஓலை பாய்” கதை தெரியுமா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிகரும் இயக்குனருமாக இருக்கும் மாரிமுத்து நடித்து வருகிறார்.
இவர் நடிகர் சீமானோடு துணை இயக்குனராக பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தை இயக்கும்போது நடந்த சுவாரசியமான கதை மற்றும் அந்த திரைப்பட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு நடிகர் வடிவேலு பற்றியும் அவரோடு பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் வடிவேலுவின் குணநலன்கள் பற்றியும் மாரிமுத்து பல தகவல்களை கூறி இருக்கிறார்.
இதுவரைக்கும் வெள்ளித்திரையில் நடிகராகவும், இயக்குனராகவும் இருந்து வந்த மாரிமுத்து முதல்முறையாக சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் மூலமாக இவர் 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகனாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கடந்து வந்த பாதை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அப்போது நடிகர் வடிவேலு பற்றி கூறியிருக்கிறார். வடிவேலு ஒரு காமெடி நடிகராக பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் "நடிகரே கிடையாது". நிஜத்தில் அவர் ஒரு "லெஜெண்ட்". கதை என்று வந்துவிட்டால் அப்படியே கேரக்டராக மாறிவிடுவார். அதனால்யே அவருடைய நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. எத்தனையோ பேரு நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதும் "நடிகன் என்றால் நான் அது வடிவேலு தான்" என்று கூறுவேன்.
அவர் ரொம்பவே வித்தியாசமானவர். சொல்லும் கதையை புரிந்து கொண்டு அவருடைய உடல் மொழியோடு அப்படியே நடித்து விடுவதால் தான் அவர் இன்னைக்கும் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். எனக்கு பிடித்த நடிகர் என்றால் எப்போதும் அதில் வடிவேலு இருப்பார். வடிவேலு கூட நான் பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் வேலை பார்த்து இருக்கிறேன். அந்த திரைப்படத்தை இயக்கியது சீமான் தான்.
சீமான் சொன்னதை அப்படியே புரிந்து கொண்டு வடிவேலு அவ்வளவு அழகாக நடித்து இருப்பார். சீமானின் கதை வித்தியாசமாக இருந்தது. அதை பலராலும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இருந்தாலும் அந்த திரைப்படத்தில் இருந்த காமெடியை யாராலும் மறக்க முடியாது. அதுவும் வடிவேலு காமெடி இப்ப வரைக்கும் பேசப்படுகிறது என்றால் அது அவருடைய நடிப்பு தான் குறிப்பாக அந்த "ஓலை பாய்" காமெடி பலருக்கும் பிடிச்சிருக்கும்
உண்மையில் அந்த ஓலைபாய் கதையை எனக்கு சொன்னது எங்க அம்மா தான். எங்க ஊருல ஒருத்தர் கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாதவராக இருந்திருக்கிறார். அவருடைய கதையை எங்க அம்மா என்கிட்ட சொல்லிட்டு இருக்கும்போது ஒரு முறை இப்படித்தான் ஓலை பாயை வைத்துக்கொண்டு அவர் அட்ராசிட்டி செய்து பின்பு மூக்கு உடைச்சதை பற்றி சொன்னாங்க அதைக் கேட்டு நான் அப்பவே சிரிச்சிட்டேன். அதைத்தான் அந்த பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் காமெடியா வெச்சோம்.
உண்மையில் அந்த காமெடியில் பாய் கிட்ட பேசும் போது இப்ப என்ன பண்ணுவ டி என்று வடிவேலு பேசுவது போல இருக்கும் ஆனால் வடிவேலு அப்படி பேசாமல் டயலாக்கை வேறு விதமாக பேசி இருப்பார். ஆனாலும் அது அழகாக இருந்தது. அப்போ நானே அவர் கிட்ட கேட்டேன் எப்படி சார் இப்படி எல்லாம் உங்களால முடியுதுன்னு, அதற்கு அவர் சிரிச்சுக்கிட்டே தோணுறதை பேசுதே அவ்வளவுதான்னு சொன்னாரு.

மேலும் நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போது அவர் நீ பேசறது பார்க்கும்போது என்னை மாதிரியே நீ பேசுற மாதிரி எனக்கு தோணுது. உனக்குள்ள என் ஆவி ஏதும் புகுந்துட்டா என்று கலகலப்பாக கேட்டுக் கொண்டார்.
நான் அப்போ நம்ம ரெண்டு பேருமே ஒரே ஊர்காரங்க. நீங்க மதுரையில கொஞ்சம் சிட்டில வளர்ந்து இருக்கீங்க. நான் மதுரையில் கிராமத்துல வளர்ந்து இருக்கேன் அவ்வளவுதான். நீங்க பார்த்து வளர்ந்த மனுஷங்களும் நான் பார்த்து வளர்ந்த மனுஷங்க எல்லாருமே ஒரே போல உள்ளவங்க தானே. அதனால நம்மளுடைய பேச்சு வழக்கு எல்லாம் ஒரு போல தான் இருக்கு என்று சொன்னேன், என்று வடிவேலு பற்றி மாரிமுத்து கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications