எதிர்நீச்சலில் டுவிஸ்ட் ..நடித்து ரேணுகாவிடம் மாட்டிக்கொண்ட குணசேகரன்..கரிகாலன் கேட்ட கேள்வி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தான் பக்கவாதம் வந்ததாக நடித்துக் கொண்டிருப்பதை பற்றி கதிர் மற்றும் கிள்ளிவளவனிடம் பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் வீட்டிற்கு வந்து குணசேகரன் செய்யும் செயலை பார்த்து சந்தேகம் அடையும் ரேணுகா எதிர்பாராத கவுண்டர் கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து கரிகாலனும் கேள்வி மேல் கேள்வி கேட்க குணசேகரன் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சென்னைக்கு போயிருந்த குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார். வீட்டில் அனைவரும் டைனிங் ஹாலில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஞானம், "என்ன பேச்செல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு" என்று ரேணுகாவை திட்டிக் கொண்டு இருக்கிறார்.
அதற்கு குணசேகரன், "எப்பா ஞானம் அது ரொம்ப நாளா இப்படித்தான் பா போய்கிட்டு இருக்கு" என்று சொல்ல, அதற்கு ரேணுகா, "பக்கவாதம் வந்து இப்படி யாரையும் நான் பார்த்ததே இல்லை. இது பக்காவான பக்காவாதமானலா இருக்கு" என்று சொல்ல நந்தினி நக்கலாக சிரிக்கிறார். அதே நேரத்தில் விசாலாட்சிக்கும் சந்தேகம் வருகிறது.

இந்த நிலையில் வீட்டு வாசலில் பைக் பக்கத்தில் சக்தியும் ஜனனியும் நின்று கொண்டு உள்ளே நடப்பதை பற்றி பேசிக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து வெளியே புல்வெளியில் சேரில் அமர்ந்தபடி குணசேகரன் ஞானத்திடம்," எப்படி கணீர் கணீர் என்று பேசுவேன் ஞானம். இப்ப பேச்சியே குளறி குளறிலா வருது" என்று சொல்ல, அதற்கு ஞானம் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன் என்று போகிறார்.
அந்த நேரத்தில் குணசேகரன் தன்னுடைய இரண்டு கைகளிலும் சொடக்கு எடுத்து செருமிக் கொண்டிருக்க, அதைத் தொடர்ந்து வெளியில் அவர்களோடு கதிரும் அமர்ந்திருக்க, அப்போது கரிகாலன் குணசேகரனுக்கு டீ கொண்டு வருகிறார். அப்படியே மாமா எனக்கு ஒரு டவுட்டு என்று கேட்க, குணசேகரன் திருதிருவென முழிக்கிறார். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய பிரமோவில் ரேணுகா வேற லெவலில் கவுண்டர் கொடுத்து குணசேகரனை காண்டாக்கி இருக்கும் விதம் பலரையும் இன்றைய எபிசோடு எதிர்பார்க்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில் கரிகாலனுக்கு குணசேகரன் நடிப்பது பற்றி சந்தேகம் வந்திருக்குமா? என்றும் கேள்விகள் குவிக்கிறது.
அதே நேரத்தில் அதிகமான ரசிகர்கள் எந்த பிரமோவில் கூட சக்தி மற்றும் ஜனனியை ஏதோ ஃபார்மாலிட்டிக்காக காட்ட வேண்டுமே என்று காட்டுகிறார்கள். அவர்களுக்கு சரியான முக்கியத்துவம் இல்லையே, என்று தங்களுடைய வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல அதிகமானோர் ரேணுகா உடைய மாசான வசனங்களுக்கு நெருப்பு பறக்க விட்டு வருகிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications