இதய நோய் மாரிமுத்துக்கு புதுசல்ல.. சில வருஷத்துக்கு முன்னாடியே.. வைரமுத்து பகிர்ந்த அந்த வார்த்தை
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மறைவு குறித்த அவருக்கு ஆஸ்தான குருவாக இருந்த வைரமுத்து கண்ணீரோடு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.
மாரிமுத்து 56 வயதில் இறந்தது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் எவ்வளவோ கனவோடு இருந்தான் என்று கண்ணீரோடு வைரமுத்து அதில் பேசியிருக்கிறார்.

மாரிமுத்துவுக்கு கல்யாணம் முடித்து வைத்ததே நான்தான். அவருடைய குடும்பத்திற்கு எந்த மாதிரி நான் ஆறுதல் சொல்ல போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை என்று வைரமுத்து பேசி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் ஆக மிரட்டி கொண்டு இருந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்பு குறித்து பல்வேறு பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில் மாரிமுத்து சினிமா வாழ்க்கையை நேசிப்பதற்கு காரணமாக இருந்த வைரமுத்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் மாரிமுத்து இறந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்ப முடியவில்லை. நான் வெளியிடத்தில் இருக்கிறேன். இந்த செய்தியை கேட்டதும் அப்படியே சேரில் சாய்ந்து விட்டேன். மாரிமுத்து என்னோட வீட்டில் செல்ல பிள்ளையாக வலம் வந்தவன். என்னுடைய கவிதைகளை அந்த அளவிற்கு அவன் நேசித்து பாராட்டி இருக்கிறான்.
எவ்வளவோ கஷ்டங்களை தாண்டிய மாரி முத்து இப்போதுதான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருந்தான். இந்த நிலைமையில் இப்படி ஆகிவிட்டது என்று என்னுடைய இதயம் வலிக்கிறது. 56 வயதில் மாரடைப்பால் அவன் இறக்க வேண்டிய அவசியமே இல்லையே. இதெல்லாம் என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.
அவனுக்கு வீடு கட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு கல்யாணம் முடித்து வைக்க வேண்டும் என்று பல கனவுகள் இருந்தது. அதைக் குறித்து என்னிடம் எப்போதும் பேசிக் கொண்டிருப்பான். இப்போது இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என்று அந்த பேட்டியில் மாரிமுத்து குறித்து வைரமுத்து கண்ணீரோடு பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் அந்த பேட்டியில் வைரமுத்து மாரிமுத்துக்கு இதய நோய் புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பே அவரது இதய நோய் சம்பந்தமாக நான் கவலைப்பட்டு நம்முடைய தென்னிந்தியாவில் மிகச் சிறந்த மருத்துவரான இதய நோய் நிருபணர் தணிகாசலம் அவர்களிடம் அனுப்பி வைத்தேன். அவர் வைத்தியம் செய்து அவரை மீட்டெடுத்தார். அதற்குப் பிறகு சரியான பாதையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத இந்த செயல் நடந்திருக்கிறது.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் பேசும்போது ஒன்று சொன்னார். ஜெயிலர் திரைப்படத்தில் ஓய்வு நேரத்தில் எல்லாம் மாரிமுத்து என்னோடு பேசிக் கொண்டிருப்பார். அப்போது உங்களுடைய கவிதைகள் எல்லாம் வரி வரியாக ஒப்பிப்பார். அவர் சொன்ன பிறகுதான் உங்களுடைய கவிதைகளில் இவ்வளவு எல்லாம் இருக்கிறதா என்று எனக்கு தெரிந்தது. உங்களுடைய கவிதைகளை சுட்டி காட்டியதே மாரிமுத்து தான் என்று வியந்தும் மகிழ்ந்தும் சொல்லிக் கொண்டிருந்தார்.
இப்போ ஒரு நல்ல கலைஞன் இறந்துவிட்டான். ஒரு நல்ல மனிதன் இறந்து விட்டான். அவன் மீது எனக்கு இருந்த அன்பை இப்போது நினைத்து நான் அழுகிறேன் என்று அந்த பேட்டியில் வைரமுத்து பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications