9 வருஷம் ஆகிட்டு.. எதிர்நீச்சல் ஆதிரை கணவரோடு புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக கொடுத்த பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடிகை சத்யா தேவராஜன் நடித்து வருகிறார்.
இவர் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.
அதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத பல ரகசியங்களையும் அதில் சத்யா பகிர்ந்து இருக்கிறார். சத்யா மற்றும் அவருடைய கணவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

சன் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டனர் அந்த வகையில் தற்போது சில மாதங்களாகவே இந்த கதை நகர்ந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக ஆதிரை இருந்து வருகிறார்.
ஆரம்பத்தில் ஆதிரை நெகட்டிவ் கேரக்டரில் இருந்து இப்போது அண்ணிகளின் நல்ல குணத்தை புரிந்து கொண்டு அதே நேரத்தில் அண்ணன்கள் சுயநலம் மற்றும் ஆண் ஆதிக்கத்தை புரிந்து இருக்கும் நிலையில் ஆதிரையின் காதலுக்காக வீட்டில் இருந்த அண்ணிமார்கள் அனைவரும் பக்கபலமாக சப்போர்ட் கொடுத்திருந்தனர்.
அதுபோல பல மாதமாக இந்த சீரியலில் ஆதிரை யாரை கல்யாணம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அருண் அல்லது கரிகாலனா? என்று பட்டிமன்றமும் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பார்க்காத விதமாக காதலித்த அருணை விட்டுவிட்டு அண்ணன் சொன்ன அதே கரிகாலன் தாலி கட்டும் சூழ்நிலை வந்துவிட்டது.

அது மட்டுமல்லாமல் கட்டாயமாக கட்டிவிட்ட தாலி வேண்டாம் என்று நடு ரோட்டில் வைத்து பிரச்சனை செய்து அந்த தாலியை கழட்டி வீசிய ஆதிரை அடுத்ததாக இப்போது ரிஜிஸ்டர் ஆபீசில் கையெழுத்து போட்டு கல்யாணத்தை பதிவு செய்து விட்டார். இனி என்ன நடக்கப் போகிறது எப்படி ஆதிரை இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
இந்த நிலையில் இவரைப் பற்றிய சில தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் இவருடைய நிஜ பெயர் சத்யா தேவராஜன் தான். இவருடைய சொந்த ஊர் சென்னை தானம். ஆரம்பத்தில் இவர் தனது பயணத்தை மாடலிங் மூலமாக தொடங்கி பிறகு சன் மியூசிக்கில் ஒரு விஜேவாக சின்னத்திரையில் நுழைந்து இருக்கிறார்.
ஒரு விஜேவாக மட்டுமல்லாமல் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் செய்து இருக்கிறார். அந்த நேரத்திலே ஒரு சில விளம்பரங்களிலும் ஒரு நடிகையாக களமிறங்கி இருக்கிறார். அதைத்தொடர்ந்து தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "அருவி" சீரியலில் மலர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சீரியலில் மட்டுமல்லாமல் "வஞ்சி அவள் பேரழகி" என்ற ஆல்பம் பாடல்களிலும் இவர் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் சத்யாவிற்கு திருமணம் முடிந்திருக்கிறது. இவருடைய கணவர் ஆனந்த். இவரும் ஒரு பிரபலமாக தான் இருந்து வருகிறாராம். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சத்யாவின் நடிப்பிற்கு தடை சொல்லாத கணவரால் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நிஜத்தில் ஆதிரைக்கு திருமணம் நடந்தது தெரியாமல் இருந்த அதிகமான ரசிகர்களுக்கு இவருடைய திருமண புகைப்படங்கள் அதிர்ச்சியை கொடுத்திருக்கும். அதுபோல சத்யா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக தன்னுடைய கணவர் பற்றி எந்த தகவல்களையும் வெளியிடுவதில்லாமல் இருக்கிறார்.

முதல்முறையாக சத்யா தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதோடு நீண்ட உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார். அதில் நீங்கள் எதிர்பாராத விதமாக என்னுடைய வாழ்க்கையில் வந்தீர்கள். ஆனால் சரியாக நேரத்தில் ஒரு மந்திரம் போல் என் வாழ்க்கையை அழகான மாற்றத்தை உருவாக்கினீர்கள்.
நீங்கள் என்னை குணப்படுத்தி என்னை முழுமையாக மாற்றி விட்டீர்கள். எனது உடைந்த வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு ஆசீர்வாதம். 2014 முதல் 2023 வரை மியூச்சுவல் ஃப்ரண்ட் முதல் பிரெண்ட்ஸ் வரை சிறந்த நண்பர்கள் முதல் தம்பதிகள் வரை. இந்த கட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. எப்படி நடந்தது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
திருமண வாழ்க்கை ரோஜாக்களில் படுக்கையல்ல, கடினமான நாட்கள். உடல் நலப் பிரச்சினைகள், தவறான முடிவுகள், சண்டைகள் இருந்தன. ஆனால் நீங்கள் எப்போதும் எதற்கும் என்னை சரியாக தேர்ந்தெடுத்தீர்கள். சில சமயங்களில் நான் தோல்வியடைந்தேன் என்பது எனக்கு தெரியும். நான் கூட திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இல்லை.
ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் எனக்காக நின்றீர்கள். உன்னை தேர்ந்தெடுப்பது ஒரு சிறந்த முடிவாகும். நான் உன்னை சுற்றியே நானாக இருக்க முடியும். தனது மனைவியின் கனவை எப்போதும் ஆதரிக்கும் மற்றும் போராடும் சிறந்த மனிதராக இருப்பதற்கு நன்றி. நான் உன்னை நேசிக்கிறேன் என்று தன்னுடைய கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications