எதிர்நீச்சலில் டாட்டா காட்டிய வேல ராமமூர்த்தி.. கால்ஷீட் பிரச்சனையா? அவசரமாக மாற்றப்பட்ட கதை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடிகர் வேல ராமமூர்த்தி கடந்த வாரம்தான் அறிமுகமானார்.
இந்த நிலையில் அவர் நடிக்கும் காட்சிகள் வெகுவாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கதையையும் அவருக்காக மாற்றி இருக்கின்றனர். இது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் பெரிய அளவில் பில்டப் கொடுத்து அறிமுகமான வேலராமமூர்த்தி தற்போது சீரியலில் காணாமல் போனது போன்று கதை வைத்திருக்கின்றனர். அது குறித்து அதிகமான கேள்விகள் எழுந்து வருகிறது. அதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் மற்றும் பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை என்றால் அது எதிர்நீச்சல் சீரியலையே சாரும் என்று கூறலாம். கல்லூரி இளைஞர்கள் வரைக்கும் இந்த சீரியல் குறித்து பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
அந்த அளவிற்கு இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்ததற்கு காரணம் இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்துவும் தான். ஆனால் அவருடைய திடீர் மறைவு ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனாலும் சீரியலை தொடர வேண்டிய இக்கட்டான சூழ்நிலை இருக்கும் நிலையில் அவர் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் அவரைப் போன்று சாயலில் இருக்கும் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்தார் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். அதுபோலவே சீரியல் தரப்பினரும் பெரும் போராட்டத்திற்கு பிறகு வேல ராமமூர்த்தியை இந்த சீரியலில் நடிக்க வைத்தனர்.

வேல ராமமூர்த்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் திடீரென்று வந்த இந்த வாய்ப்பை விட்டு விட மனமில்லை என்று அவர் ஏற்கனவே பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருடைய காட்சிகள் கடந்த வாரம் எதிர்நீச்சல் சீரியலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் அவர் அறிமுகமாவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அவர் குறித்து அதிகமான பில்டப்புகளும் கிளிப்சுகளும் அடிக்கடி சீரியலில் காணப்பட்டது.
ஒரு கட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி அறிமுகமானார். அறிமுகமான முதல் நாளே அவர் போலீஸ் ஆபீஸரை அடித்த விதம் ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஏற்கனவே இருந்த குணசேகரன் இப்படிப்பட்ட கேரக்டர் கிடையாது. அவருக்கும் இப்போது வந்தவருக்கும் அதிகமான மாற்றங்கள் இருப்பது ரசிகர்கள் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் அப்படி புதியதாக வந்த ஆதி குணசேகரன் நடந்து கொள்வதற்கு காரணம் அவருக்கு கால்ஷீட் பிரச்சனை இருப்பதுதான் என்று கூறப்படுகிறது. ஆதி குணசேகரன் எங்கே என்று எல்லோரும் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் இவர்தான் அவர் என்று சொல்லும் விதமாக வேல ராமமூர்த்தியை காட்டி விட்டு அவர் நடித்து வரும் திரைப்படங்களில காட்சிகளை இனி முடித்த பிறகு தான் இவர் சீரியலில் அதிகமாக காட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் முதல் நாளே போலீஸ் ஆபீஸரோடு பிரச்சனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் எப்படியும் அந்த போலீஸ்காரன் என்னை தேடி வீட்டிற்கு வருவார். நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனால் சில நாட்கள் ஆகும் வெளியே வருவதற்கு என்று குணசேகரன் கூறி இருந்தார். அதுபோல வீட்டிற்கு வந்த முதல் நாளே ஈஸ்வரியை அடித்து விட்டு, மருமகள்களை மிரட்டி விட்டு நான் தூங்க போகிறேன் என்று கிளம்பிவிட்டார். அடுத்த நாள் எபிசோட்டில் அவர் வரவில்லை.

அதைத்தொடர்ந்து நேற்றைய எபிசோடில் வந்தாலும் அவர் போலீஸ் ஆபீசர்கள் வந்து அவரை கைது செய்வது போன்று காட்சிகள் வைத்திருந்தனர். அப்போதும் இவர் கொஞ்சம் கூட அசராமல் வடிவேலு திரைப்படத்தில் சொல்வது போன்று தான் நானும் ஜெயிலுக்கு போறேன் என்பது போன்று அம்மாவிடமும், தன்னுடைய தம்பிகளிடம் டாடா காட்டி விட்டுப் போயிருந்தார். அப்போதும தன்னுடைய தம்பி ஞானம் நான் வக்கீலுக்கு போன் பண்ணுகிறேன் என்று சொல்லும் போதும் வேண்டாம் இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் வந்து விடுவேன்.
நீ வீட்டு சூழ்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். வீட்டு பெண்களை விட்டுறாதீங்க என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு கிளம்பி போயிருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கூட குணசேகரன் போலீஸ் ஸ்டேஷனில் இல்லை, அவரை காணவில்லை என்பது போன்று கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே குணசேகரன் போனில் பேசியபடியே சில எபிசோடுகள் கடந்தது போன்று தான் இனி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே புதிய குணசேகரன் வந்திருக்கும் நிலையில் அவருடைய கேரக்டர் அதிகமாக இருந்தால்தான் ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் வந்ததுமே குணசேகரன் மீண்டும் காணாமல் போயிருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிருப்தியை தான் ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியல் கதை பயணித்துக் கொண்டிருந்ததுக்கும் இப்போது மாரிமுத்துவின் எதிர்பாராத மரணத்தால் கதை வேற மாதிரி பயணித்துக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று கருத்து கூறிவரும் நிலையில் இனி வேகமாக வீட்டுப் பெண்கள் தங்களுடைய அடுத்தடுத்த வெற்றியை நோக்கி பயணித்தால் ரசிகர்கள் மீண்டும் இதைப் பாராட்ட தொடங்கி விடுவார்கள். இதை இயக்குனர் கவனித்தால் நன்றாக இருக்கும். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications