பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு வருண் வெளியிட்ட ஃபேமிலி போட்டோ.. க்யூட்டான குடும்பம்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வருண் 84வது நாள் வெளியேறியுள்ளார்.
திரை துறை குடும்பத்தை சேர்ந்த வருண் தற்போது தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

குடும்பத்தினரோடு சந்திப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு வருண் தன்னுடைய குடும்பத்தை சந்தித்துள்ளார்.84 நாட்கள் குடும்பத்தை பிரிந்து இருந்த அவர் தற்போது அவருடைய க்யூட்டான குடும்பத்தோடு அழகான புகைப்படங்களை எடுத்திருக்கிறார். இவரை வரவேற்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விமர்சனமாக கொண்டாடி இருக்கின்றனர். அவருடைய திரைப்படம் டிரைலர் வெளியான நிலையில் குடும்பத்தினரின் மட்டுமல்லாமல் ரசிகர்களின் ஆதரவும் ஆசிர்வாதங்கள் வருணுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது.

பயத்தை புறம் தள்ளியதால் வெற்றி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானால் தாங்கள் இதுவரைக்கும் சேர்த்து வைத்திருந்த பேரும் புகழும் கெட்டுப் போய்விடும் என்று பலபேர் இந்த நிகழ்ச்சியை பார்த்து ஒதுங்கி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் இதில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை காட்டினால் ரசிகர்கள் நன்றாக நம்மை ரசிப்பார்கள் என்று உறுதியான நம்பிக்கையோடு கலந்து கொண்ட வருண் இந்நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களுக்கு அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை.

திரைப்படங்களில் அறிமுகம்
திரைப்பட நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருண் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த பரிமளா திரையரங்கம் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். எல்கேஜி, ஒருநாள் இரவில், சில சமயம், கோமாளி, சீறு, குட்டிக்கதை, நெருப்புடா, வனமகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலே உள்ள திரைப்படங்களில் சைடு கேரக்டரில் இவர் நடித்துக் கொண்டிருந்ததால் ரசிகர்கள் இவரை அந்த அளவாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவில்லை.

குடும்ப போட்டோஸ் வைரல்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஜோஸ்வா திரைப்படத்தை நடித்து முடித்துவட்டு தான் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் தன்மை நன்றாக புரிந்து கொண்ட பிறகு அவருடைய திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது இவருடைய வெளியேற்றத்தின் அன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்து உள்ளது. கூட்டு குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட இவருடைய குடும்ப உறுப்பினர்கள் தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் எடுத்த முதல் குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications