காயப்படுத்தாமல் கருத்து சொல்ல ராஜுக்கு தெரியாதா?? ராஜீக்காக குரல்கொடுக்கும் ரசிகர்கள்
சென்னை: ராஜூ பற்றி சக போட்டியாளர்கள் பேசிய வார்த்தைக்கு அவருடைய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க மாட்டேன் என்கிறார் என்று போட்டியாளர்கள் வரிசைகட்டி குற்றசாட்டுகளை குவித்து வருகின்றனர்.
போட்டியாளர்களின் இந்த செய்கையால் ராஜுவுக்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்களாம்.
சின்னத்திரை காமெடி நடிகர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒரு சில போட்டியாளர்கள் தான் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நபர்களாக இருந்தனர். அதில் ராஜுவும் ஒருவர். இவர் சின்னத்திரையில் காமெடி நடிகராக பலருக்கும் பரிச்சயம் ஆனவர். இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதும் ஆரம்பத்திலிருந்தே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து தான் வருகிறது. இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

சிறந்த டைமிங் காமெடி
இந்த சீசனில் இவர்தான் சிறந்த என்டர்டெயினராக இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். எவ்வளவு ஒரு கலவரமான நேரமாக இருந்தாலும் இவர் தன்னுடைய காமெடியால் அந்த இடத்தை ஜாலியாக மாற்றி விடுகிறார் என்று ரசிகர்கள் இவருக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை கூட பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறார் என்றும் பலர் கூறி வருகின்றனர் நேற்றைய எபிசோட்டில் கூட இசைவாணி இவருக்கு கொடுத்த அவார்டுக்கு இவர் அசால்ட்டாக சிரித்தபடியே பதில் கூறிவிட்டார்.

ரசிகர்களின் ஆதரவு
இவருக்கு இசைவாணி, நீ புடுங்குற ஆணி எல்லாம் தேவையில்லாதது தான் என்ற அவார்டை கொடுத்திருந்தார். அதுக்கு அதை ஏற்றுக்கொண்ட ராஜூ, இனி தேவையுள்ள ஆணி பிடுங்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பேசி அந்த சூழ்நிலையை மாற்றிவிட்டார். இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் இந்த வீட்டில் தங்களுடைய கருத்துக்களை வெளியே சொல்வதில் தயக்கம் காட்டுவது யாரென்று பிக்பாஸ் கேட்டிருந்த கேள்விக்கு போட்டியாளர்கள் பலரும் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியின் பெயரை கூறியிருந்தனர். இதை பார்த்த ராஜுவின் ரசிகர்கள் ராஜுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications