திருமண மேடையில் புகழ் செய்த செயல் .. புகழ் எப்பவுமே இப்படித்தானா??
சென்னை: எளிமையான முறையில் திருமணத்தை முடித்த புகழ் மணமேடையில் செய்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தான் ஒரு காமெடி நடிகர் என்பதை மண மேடையிலும் நிரூபித்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நெட்டிசன்கள் பலர் மனைவிக்கு இப்போதே கைகட்ட தொடங்கி விட்டாரா என்று கலாய்க்கவும் தவறவில்லை

கலாய்க்கும் நெட்டிசன்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான புகழ் தற்போது எளிமையான முறையில் திருமணத்தை முடித்து இருக்கிறார். நீண்ட காலமாக காதலித்து வந்த தனது காதல் மனைவியோடு திருமண மேடையில் இவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திருமண நாளில் கூட இப்படியா செய்வார் என்று ஒரு சில நெட்டிசன்கள் புகழை பார்த்து கலாய்த்து வருகிறார்கள்.

கொஞ்சம் கூட பந்தா இல்லையே
சின்னத்திரையில் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் அடி எடுத்து வைத்திருக்கும் புகழ் ரசிகர்கள் அதிகமாக வைத்துள்ளார். ஆனாலும் தனது திருமணத்தை ரசிகர்களிடம் சொல்லாமல் தன்னுடைய பாரம்பரிய முறைப்படி கோவிலில் எளிமையாக திருமணத்தை முடித்துள்ளார். திருமணத்திற்கு விருந்தினராக வந்த திரைப் பிரபலத்தோடு விதவிதமாக போட்டோக்களை எடுத்து இருக்கிறார். திருமண நாளில் கூட கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் எப்போதும் போல சிரித்த முகமாகவும் நக்கல் நையாண்டித்தனத்தமாகவும் புகழ் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

திருமண செய்தியை சொல்லலையே
தான் ஒரு முரட்டு சிங்கில் என்று பல காலமாக ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருந்த புகழ் திடீரென்று தான் பல வருடங்களாக காதலிக்கும் செய்தியை ரசிகர்களிடம் போட்டு உடைத்தார். அவர் பென்ஸி என்பவரை காதலிப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வந்தனர். தொடர்ந்து இவரிடம் எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு 'விரைவில்' என்ற ஒரு பதிலையே கூறி வந்தார். இந்த நிலையில் ஒரு சில நாட்களாக சமூக வலைதளத்தில் புகழ் தன்னுடைய திருமணத்திற்கு குக் வித் கோமாளி பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் வைக்கும் போட்டோக்கள் வைரலாக பரவி வந்தது.இந்த நிலையில் திருமணம் எப்போது என்று தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு இன்று தன்னுடைய திருமண போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மாறாத குணம்
திருமணத்திற்கு ஒரு சில திறை பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவருடன் புகழ் மற்றும் அவருடைய காதல் மனைவியும் கைகளை கட்டியபடி கலக்கல் ஆக போட்டோக்களை எடுத்து குவித்து இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் இதே போஸில் இரண்டு மூன்று போட்டோக்களை புகழுடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதும் அந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் பலர் புகழ் எப்போதுமே அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் திருமண நாளில் கூட இப்படியா என்று வியந்து போய் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications