Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவால்களை எதிர்கொள்ள சர்வைவரில் களமிறங்கும் புது கன்டஸ்டன்ட்கள்..அதிர்ச்சியில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் மிரட்டலான சர்வைவர் நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் 8 கன்டஸ்டன்ட்களை களமிறக்கி அவர்களுடைய வீரதீர செயல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

எந்த நிலையில் இவர்களைத் தவிர இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 10 கண்டஸ்டண்டுகள் யார் என்று ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சர்வைவர் தொடக்கத்துக்கு வந்தாச்சு

சர்வைவர் தொடக்கத்துக்கு வந்தாச்சு

வேர்ல்டு லெவலில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செப்டம்பர் 12 முதல் ஒளிபரப்பாகிறது. கமலஹாசன், விஜய்சேதுபதியை தொடர்ந்து நடிகர் அர்ஜுனும் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக களம் இறங்கி உள்ளார். இவருடைய ஃபர்ஸ்ட் ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் ஆர்வத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். ஆக்சன் கிங் தொகுப்பாளராக களமிறங்குகிறார் என்றால் அங்கே ஆக்சன் அதிகமாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீண்டும் மீண்டும் தூண்டுவது போல அர்ஜுனும் ஒவ்வொரு ப்ரோமோவிலும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

ரியாலிட்டி ஷோவில் புதுமை

ரியாலிட்டி ஷோவில் புதுமை

சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட உள்ளனர். தங்களுக்கு தேவையான உணவு தண்ணீர் மற்றும் அடிப்படை தேவைகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு போட்டியில் பல்வேறு விதமான சவால்களும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு யார் இறுதிவரை போட்டியில் உள்ளார்களோ அவர்களே இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கின்றனர். பிற ரியாலிட்டி ஷோக்கள் போல இது எளிதான ரியாலிட்டி ஷோக்களாக இருக்காது. பல ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் ஒரு வீடு போன்ற சூழல் தான் படமாக்கப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி அப்படி எல்லாம் இல்லை. முழுக்க முழுக்க தனித்தீவில் காட்டில் படமாகிறது. இதனால் போட்டியாளர்கள் தாங்கள் வாழ்ந்த சொகுசு வாழ்க்கையை இங்கு வாழ முடியாது.

டாஸ்க் எல்லாம் வேற லெவல் தான்

டாஸ்க் எல்லாம் வேற லெவல் தான்

வெயில் மழை உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் எதிர்கொள்ளவேண்டும். வானிலை பொருத்து போட்டியாளர்கள் தங்களின் அடிப்படை தேவையான உணவு, தங்குமிடம் உள்ளிட்டவை கருத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பத்தில் சிரமப்பட்டு உள்ளனர். இருந்த போதிலும் வெற்றி ஒன்றே இலக்கு என்பதை முன்வைத்து சக போட்டியாளர்கள் மற்றும் விடாமுயற்சியுடன் அங்கு உயிர் வாழ சிறந்த வழிமுறைகளை கண்டறிய வேண்டும். பொதுவாக பல ரியாலிட்டி ஷோக்களுக்கு மாற்றாக இந்த ஷோ இருப்பதால் திரில்லிங்க்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அந்தப் பத்து பேர் யார்

அந்தப் பத்து பேர் யார்

தமிழில் முதல்முறையாக களமிறங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ராந்த், உமாபதி ராமையா, நந்தா, பெசன்ட் ரவி, விஜயலட்சுமி, ஸ்ருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி ஆகியோர் முக்கிய போட்டியாளராக களமிறங்கி உள்ளனர். இவர்கள் தவிர மேலும் 10 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பற்றி விவரம் சஸ்பென்ஸாக உள்ளது. ஆனால் மொத்தமாக பதினெட்டு போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளர்களாக எட்டு பேரை பற்றி மட்டும்தான் ப்ரோமோ வில் அடிக்கடி காட்டிக் கொண்டிருக்கின்றனர். சர்வைவர் நிகழ்ச்சியை ஆப்பிரிக்காவிலுள்ள ஜான்சிபர் தீவில் நடக்கிறது. ஏற்கனவே படப்பிடிப்புகள் துவங்கி விட்டது. சர்வைவர் நிகழ்ச்சியில் உள்ளூர் போட்டியாளர்கள் 8 பேர் தவிர பல நாடுகளில் வசிக்கும் சர்வதேச போட்டியாளர்கள் சிலரும் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கிறார்கள். அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டதோ அதே தரத்தில் இங்கும் நடைபெறுகிறது.

எதிர்பார்ப்பு கூடிப்போச்சு

எதிர்பார்ப்பு கூடிப்போச்சு

போட்டாஸ் மற்றும் மற்ற விஷயங்கள் உள்ளிட்ட எதையும் இங்குள்ள ரசிகர்களுக்காகவும் போட்டியாளர்களுக்கும் மாற்றப்படவில்லையாம். ஆணுக்குப் பெண் சமம் என்பது இந்த காலம் அதனால் இந்த போட்டியில் எந்த பாகுபாடும் இல்லை. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இந்த போட்டியில் களமிறங்க பட்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு தனித்துவமான சிறப்பு அம்சம் என்னவென்றால் ரசிகர் யாரும் ஓட்டுப் போடப் போவதில்லை. போட்டியாளர்களே ஒன்றாக இணைந்து வாக்களிப்பார்கள். போட்டியாளர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது எப்படிப்பட்ட சூழல் என்பதை அவர்கள் அறிவார், அதற்கு ஏற்றபடி அவர்களே யாருக்கு ஓட்டு அளிக்கலாம் என்பதை முடிவு செய்வார்கள். இந்த ஒரு விஷயம் பார்வையாளர்களுக்கு இன்னும் புதுமையாகவும் வித்தியாசமாகத்தான் இருக்கப்போகிறது. இந்த நிகழ்ச்சி நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+