மகாலட்சுமிக்கு ஏன் இந்த திடீர் முடிவு.. நல்லா தானே போய்கிட்டு இருக்குது..!? நெட்டிசன்களின் கேள்விகள்
சென்னை: ஒரு சில வாரங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த மகாலட்சுமியிடம் நெட்டிசன்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி திடீரென்று திருமணம் செய்து விட்டாரே என்று ஏக்கத்தில் இருந்த அவருடைய ரசிகர்களுக்கு தற்போது மகாலட்சுமியின் முடிவு வருத்தத்தை கொடுத்திருக்கிறதாம்.
ஏற்கனவே இவருடைய திருமணத்தை வைத்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்து கொண்டு வரும் நேரத்தில் மகாலட்சுமி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதனால் மேலும் இவரை பற்றி பலரும் கருத்து தெரிவிக்க ஏதுவாக இருக்கும் என்று இவருடைய நலம் விரும்பிகள் வருத்தத்தோடு கூறி வருகிறார்கள்.

ஃபேவரிட் தொகுப்பாளர்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் வாசுகி கேரக்டரில் நடித்து வரும் மகாலட்சுமி இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் நடிக்காத சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவர் பல சேனல்களில் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் தொகுப்பாளர்களில் ஒருவராக இவரும் இருந்து வருகிறார். மகாலட்சுமி சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். போட்டோ சூட் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
மாடர்ன் உடைகளிலும், புடவைகளிலும் இவர் நடத்தும் போட்டோ சூட் பார்ப்பதற்காகவே சமூக வலைத்தளத்தில் இவரை சுற்றி பல ரசிகர்கள் வருகிறார்கள். இந்த நிலையில் இவர் இரண்டாவது திருமணத்தை திடீரென்று முடித்து விட்டார். அதுவும் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்தது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் இருக்கும் உருவ வேற்றுமையை கூறி பலர் மகாலட்சுமிக்கு அறிவுரை கூறியுள்ளனர். காதல் முன்பு உருவமோ வேற எதுவுமே தேவையில்லை என்பதை தற்போது மகாலட்சுமி நிரூபித்து விட்டார் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்தும் புகைப்படங்கள்
திருமணம் முடிந்து ஒரு சில வாரங்கள் ஆனாலும் மகாலட்சுமியின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு ரவீந்தரோடு மகாலட்சுமி செல்லும் இடமெல்லாம் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களுக்கு மேலும் வெறுப்பேற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம். இதை பார்த்த இவருடைய தீவிரமான ரசிகர்கள் அங்கே செல்ல வேண்டாம். அங்கே சென்ற பல பிரபலங்கள் பிரிந்து விட்டார்கள் அல்லது அவர்களுடைய வாழ்க்கையை மாறிவிட்டது. அதனால் நீங்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரைகளை கூறி வருகிறார்கள்.

ரசிகர்களின் அறிவுரைகள்
மகாலட்சுமியின் திருமணத்திற்கு பிறகு தற்போது அவருக்கு மஞ்சள் கயிற்றில் தாலிகோர்க்கும் பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. அந்தப் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார். அதேபோல அந்த புகைப்படங்களை ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய மனைவிக்கு இது அடையாளம் இல்லை. அவள் ஆசைப்பட்டதற்காக இதை நான் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்..?? மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு அவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். திருமண புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதால் பலரும் இவர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் மன நிம்மதி போய்விடும் என்று மகாலட்சுமிக்கு அறிவுரைகளை கமெண்ட்களில் அனுப்பி வருகிறார்கள்.
-
“கருப்பு நிறம்” ஊனமா? மாரி செல்வராஜ் அப்படி சொன்னது சரியா? கென் கருணாஸும் இப்படி! காஜல் பசுபதி ஆதங்கம் -
நான் உடைந்து போய் விட்டேன்.. ஆயிரம் பேரின் உழைப்பு! திடீர்னு மாறிய நிலைமை! கண்ணீருடன் விக்னேஷ் சிவன் பதிவு -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா












Click it and Unblock the Notifications