உண்மையிலேயே இவங்க இப்படிதானா...கேமரா முன்னாடி என்னமா நடிக்கிறாங்க பாஸ்...கொதிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களின் கேரக்டரை பார்த்து ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
Recommended Video
அது எப்படி...எல்லாரும் ஒரே போல விட்டுக்கொடுத்து கூட்டு சேர்ந்து கும்மி அடிக்கிறார்கள் என்று ரசிகர்களுக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறதாம்
போன சீசனில் முதல் நாளிலிருந்து பிரச்சனையை கிளப்புவதற்கு ஆள் இருந்தது ஆனால் இந்த சீசனில் அது யார் என்றே தெரியவில்லையே என்று ரசிகர்கள் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்கள்.

சலசலப்புக்கு பஞ்சமில்லை என்ன தங்கம் இரு
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது தான் தொடங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை மட்டுமல்லாமல் சலசலப்பையும் ஏற்படுத்திவிட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு தான் காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி நிகழ்ச்சி தொடங்கியதும் ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் இதில் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல புதுமுகங்கள் களமிறக்கி கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்து விட்டார்.

புதுமுகங்கள் அதிகம்
இவர்கள் பெயர் என்ன என்று ரசிகர்கள் மனதில் பதிய வைப்பது பெரிய வேலையாக இருந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் பலருடைய பெயரை மறந்து விட்டு என்ன பெயர் என்று மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சொல்வதும் போல அனைவரும் சந்தோஷத்தையும் துக்கத்தையும் மாறி மாறி பகிர்ந்து கொண்டு ஜாலியாக என்ஜாய் பண்ணி வருகின்றனர். இதனை பார்த்ததும் ரசிகர்கள் உண்மையில் இவர்கள் இப்படித்தான் இருக்கிறார்களா அல்லது கேமராவுக்கு நடிக்கிறார்களா என்று கேட்டு வருகின்றனர்.

அழுகாச்சி சீன்கள்
அதுவும் நேற்றைய 2-வது எபிசோடில் அனைவரும் தங்களுடைய கடந்த கால கதைகளைச் சொல்லி ஒரு புறம் அழ வைத்துக் கொண்டிருக்கும்போது மற்றொருபுறம் சக போட்டியாளர்கள் அவர்களை கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் போட்டியாளர்களுக்கு உள்ளே அவ்வளவு குறைகளை எடுத்துக் கூறினாலும் இவர்கள் ஓகே என்று சொல்வது தன் கொஞ்சம் நம்ப முடியாத வகையில் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவு நல்லவர்களா!! உண்மையில் ரசிகர்கள்தான் இவர்களைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களா??என்று பலர் கமெண்ட்களை கொட்டி வருகின்றனர்.

பவானி ரெட்டிக்கு பெருகும் ஆதரவு
ஐந்தாவது சீசனில் போட்டியாளர்கள் அதிகமாக கலந்துகொண்டு இருந்தாலும் அதில் அதிகமான பெண்கள் கூட்டம் இருப்பது இளைஞர்களுக்கு செம என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. பலர் பாடகியாகவும் மாடலாகவும் இருந்தாலும் அதிகமான ரசிகர்கள் சின்னத்திரை நடிகை பவானி ரெட்டிக்கு உருவாகி இருக்கின்றனர். இவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சின்னச் சின்ன செயல்களும் வைரலாகி வருகிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
முதல்நாள் டாஸ்க் கொடுத்த ஒரே காரணத்திற்காக வரிசை கட்டிக் கொண்டு அனைவரும் தங்களுடைய சோக கீதங்கள் பாடிக்கொண்டிருக்கும் போது அபிஷேக் தன்னுடைய தாயை நினைத்து உருகி கதறி கதறி அழுதது நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே நெட்டிசன்களால் பாடாய்படுத்த பட்டு கொண்டிருந்தார். இவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்களும் பல நெகட்டிவ் கமெண்டுகளை பெற்று இருப்பது போலவே தற்போது இவர் கேமரா முன்னாடி செய்யும் ஒவ்வொரு செயல்களும் நெட்டிசன்கள் கவனமாக கண்ணுக்குள்ளே எண்ணெய் ஊற்றி கவனமாக வாட்ச் பண்ணி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications