நெட்டிசன்கள் உருவாக்கிய "ஹலோ" யுனிவர்ஸ்... இதுவும் ஒரு தினுசாகத்தான் இருக்கிறது..!!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து பட்டைய கிளப்பிய விக்ரம் படம் குறித்த எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லோகி யூனிவர்ஸ் படம் என்று சொல்லப்பட்ட விக்ரம் படத்தை இயக்குனர் ஹரியின் ஹரி யுனிவர்சாக மாற்றி நம்ம இணையதள குறும்பர்கள் எடிட் செய்துள்ள வீடியோ, இயக்குனர் ஹரி படத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களும் பக்காவாக பொருந்த கலக்கலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

வீடியோ வடிவம் பெற்ற கற்பனை
திரைத் துறையில் சில வெற்றி படங்கள் வரும்பொழுது அந்தப் படத்தை பற்றி பிற இயக்குனர்கள் கூறும் பொழுது இதே போன்ற ஒரு படத்தை தாங்களும் எடுக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. பல இயக்குனர்கள் அதைப் பற்றி வெளிப்படையாகவும் கூறுவார்கள்.ஒரு வெற்றிப் படத்தை வேறொரு இயக்குனர் அவரது பாணியில் எடுத்திருந்தால் எப்படி எடுத்திருப்பார் என்று கற்பனை பேச்சளவில் மட்டுமே கற்பனையாக இருந்து வந்த நிலையில், தற்போது நமது நெட்டிசன்கள் வீடியோவாகவே எடிட் செய்து இமேஜினேசனில் கலக்கி வருகின்றனர்.

இயக்குனர் ஹரி டெம்ப்லேட்டுகள்
ஒரு சில இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படங்களில் தங்களுக்கென்று சில டெம்ப்லெட்டுகளை டீபால்டாக வைத்திருப்பார்கள். என்னதான் கதை, திரைக்கதைகளை மாற்றினாலும் அந்த டெம்ப்ளட்டில் இருக்கும் விஷயங்கள் தாங்கள் இயக்கும் எல்லா படத்திலும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். அந்த வகையில் குடும்ப பாங்கான படங்களை இயக்குவதில் கை தேர்ந்தவரான இயக்குனர் ஹரி தன்னுடைய படங்களில் ஒரு சில விஷயங்களை எப்பொழுதும் தவறாமல் வைத்திருப்பார். படத்தின் ஒரு சில சீன்களை மட்டும் பார்த்தாலே இது இயக்குனர் ஹரி படம் தான் என்று எளிதில் அடையாளம் காணும் அளவிற்கு இருக்கும்.

தமிழ் சினிமாவில் லோகி யுனிவர்ஸ்
ஹாலிவுட் படங்களில் தான் ஒரு படத்தின் அடுத்தடுத்து வரவிருக்கும் அப்படத்தின் பாகங்கள் குறித்த லீடுகளை முந்தைய படங்களில் கூறி இருப்பார்கள். மார்வெல் சீரிஸ் போன்ற படங்கள் அதற்கு நல்ல உதாரணங்களாகும். எதேச்சையாக அமைந்ததோ!? அல்லது திட்டமிடப்பட்ட அமைந்ததோ!? தற்பொழுது தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லோகி யுனிவர்ஸ் பேமஸ் ஆகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படமான கைதி படத்தில் கொடுத்த லீடுகளை வைத்து விக்ரம் படத்தை இயக்கியதால் அது லோகி யுனிவர்ஸ் என்று கூறப்பட்டது.லோகி யுனிவர்ஸில் இன்னும் படங்கள் வரும் என்று இயக்குனரும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நெட்டிசன்களின் ஹலோ யுனிவர்ஸ்
டிரக்ஸ்,மாபியா என்று ரா வாக படம் எடுக்கும் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தின் சீன்களை, குடும்பம்,காதல், செண்டிமெண்ட் ,ஆக்சன்,ரவுடிசம், என்று மசாலா படம் எடுக்கும் ஹரி படங்களின் பாடல்கள் டயலாக்குகளோடு சேர்த்து எடிட் செய்துள்ள வீடியோ, ஒருவேளை விக்ரம் படத்தை ஹரி எடுத்திருந்தால் இப்படித்தான் எடுத்திருப்பாரோ!? என்று நம்பும் படியாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக ஹரியின் படங்களில் ஹீரோவை விட கேமராமேனுக்குத்தான் வேலை அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு கேமராவை மேலும் கீழுமாக, சந்து பொந்தாக ஓட விட்டுவிடுவார். அதையும் அந்த எடிட் செய்யப்பட்ட வீடியோவில் தத்ரூபமாக செய்துள்ளனர். இதை ஹரி-லோகி இணைந்த "ஹலோ" யுனிவர்ஸ் மூவி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications