பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்குள் மாறிவிட்டாரா?? இதை எதிர்ப்பார்கலையே ரசிகர்கள் குமுறல்
சென்னை: எப்படி இருந்த இவர் இப்படி மாறி விட்டாரே என்று இப்போ பிரியங்காவை பார்த்ததும் பலர் பதறி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் மட்டுமல்லாமல் காமெடியும் அடிக்கடி கொடுத்து ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டிக்கொண்டிருக்கும் பிரியங்கா இப்போ நெட்டிசன்கள் வாயில் மாட்டி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் இருந்த பிரியங்கா இப்போ மாறிவிட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பிரபலமான தொகுப்பாளர்
விஜய் டிவியின் தொகுப்பாளராகவும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருந்த விஜே பிரியங்கா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா??இல்லையா??என்று பெரும் பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு கொண்டிருந்தது. அதில் ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுரை கூறி வந்தனர். காரணம் பெயர் கெட்டுவிடும் என்று அவருக்கு பலர் கூறி கொண்டிருந்தார்களாம். ஆனால் அதையெல்லாம் மீறி இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

இவருக்கு பிளஸ் பாயிண்ட் தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரைக்கும் இல்லாத வகையில் தற்போது அதிகமான புதுமுகங்கள் அறிமுகம் ஆகி இருப்பது இவருக்கு கூடுதல் ஒரு பிளஸ் தான். பலர் புதுமுகமாக இருப்பதால் அனைவருக்கும் பரிச்சயமான இவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவருக்கு ஆதரவும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். இவர் செய்யும் காமெடிகள் பலநேரங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகளும் அடிக்கடி வைரலாக பரவி வருகிறது.
Recommended Video

கொளுத்தியும் போடுவோம்
இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் கலகலப்பாக தான் ஆரம்பத்தில் இருந்து கொண்டு இருந்தனர். ஆனால் முதல் வாரம் முடிவடைந்ததும் அவர்களுக்குள் சிறு பிரச்சினைகள் ஏற்பட தொடங்கி இருந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டு வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் காலடி எடுத்து வைக்கும் போது பிரச்சனைகள் பூகம்பமாக வெடிக்க தொடங்கி இருக்கிறது. அதுவும் பலர் பிரியங்கா மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இவர் ஜாலியாக பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தாலும் சில நேரங்களில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக கொளுத்திப் போட்டு விடுகிறார் என்று கூறிவருகின்றனர்.

ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம்
தொகுப்பாளர்களில் டக்கென்று ரசிகர்களின் மனதில் நினைவிற்கு வரும் ஒரு கேரக்டராக தான் இவர் இருந்து வருகிறார். ஆனால், தற்போது இந்த நிகழ்ச்சியில் இவருடைய பெயர் சரியத் தொடங்கி இருக்கிறது. காரணம் இவர் அபிஷேக் உடன் சேர்ந்து விளையாடுவது ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லையாம். அது மட்டுமல்லாமல் அபிஷேக் செய்யும் செயல்களுக்கு இவர் உடந்தையாக இருக்கிறார் என்று இவரை பலர் கலாய்த்து வருகின்றனர். ஆனால் இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு வருகின்றனர். போனவாரம் எலிமினேஷனில் இவர்தான் அதிகமான வாக்குகள் பெற்று முதலிடத்தில் சேவ் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரமும் இவர் நாமினேஷனில் இருக்கும் நிலையில் இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications