இதுதான் டாஸ்க்...உச்சுக் கொட்டும் ரசிகர்கள்...மிரண்டுபோன போட்டியாளர்கள்
சென்னை : போட்டினா இப்படிதான் வெறித்தனமா இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் சர்வைவரின் முதல் ப்ரோமோவை பார்த்து ஆரவாரமிட்டு வருகின்றனர்.
தண்ணி மேல வித்தை காட்டும் புது போட்டியை பார்த்து ரசிகர்களின் மனதும் தத்தளித்து வருகிறதாம்.
தண்ணீர் அதிகமாக இருக்கிறது என்பதற்காக இப்படி தண்ணிக்குள்ளே டாஸ்க்கை வைத்து போட்டியாளர்களை பாடாய் படுத்தலாமா என்று நெட்டிசன்கள் கலாய்க்கவும் தவறவில்லை.

மிரட்டும் ரியாலிட்டி ஷோ
ஜீ தமிழில் முதல்முறையாக ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது இன்டர்நேஷனல் நிகழ்ச்சிகளை போன்று தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவருமே பலருக்கும் பரிச்சயமானவர்கள் தான். நடிப்பில் தொடங்கி விளையாட்டு வீரர்கள் வரை பலதரப்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து இப்ப வரைக்கும் விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி கொண்டுதானிருக்கிறது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டு அணியும் கலக்குறாங்களே
18 போட்டியாளர்களையும் இரண்டு அணிகளாக காடர்கள் வேடர்கள் என்ற பெயரில் பிரித்திருக்கின்றனர். அதில் காடர்கள் அணியில் ராம்.சி, இந்திரஜா சங்கர், லேடி கேஷ், விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா போன்றோர் இருக்கின்றனர். அதுபோல வேடர்கள் அணியில் லக்ஷ்மி பிரியா, அம்ஜத் கான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தா, லக்கி நாராயணன், பெசன்ட் ரவி, ஐஸ்வர்யா, விஜே பார்வதி போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் நேற்று நடந்த எலிமினேஷன் ரவுண்டில் காடர்கள் அணியிலிருந்து இந்திரஜா சங்கர், வேடர்கள் அணியிலிருந்து ஸ்ருஷ்டி டாங்கே வெளியேறி மூன்றாம் உலகத்தில் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர். இவர்கள் வேறொரு டிவியில் இருப்பது அவர்களின் அணியினருக்கு தெரியவில்லை என்றாலும் அடுத்ததும் எலிமினேஷன் இருக்கிறது என்று இன்றைய ப்ரோமோ வில் அர்ஜுன் கூறியிருக்கிறார்.

இன்றைய முதல் ப்ரோமோ
இன்று வெளியிட்ட முதல் ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் வேற லெவல் என்று கூறிவருகின்றனர். அப்படி என்னதான் அந்தப் ப்ரோமோவில் இருக்கிறது என்று பார்த்தால் நேற்று இவர்கள் எலிமினேஷன் ரவுண்டில் நின்று கொண்டிருந்த அதே இடத்தில் இருக்கும் ஒற்றைத் தென்னை மரத்தினாலான பாலத்தில் மேலே ஏழு பேர் நின்று கொண்டு கொண்டிருக்க வேண்டும். அவர்களில் ஒவ்வொருவராக கடந்து அனைவரும் அடுத்த பக்கத்திற்கு செல்ல வேண்டும் இந்த டாஸ்க்கை பார்க்கும்போதே அவ்வளவு எளிதல்ல என்று தெரிகிறது கீழே தண்ணீர் மேலே இருப்பதோ ஒரே ஒரு தென்னை மரத்தினால் ஆன பாலம் அதில் ஒருவர் நின்று கொண்டிருப்பதே கடினம் அதில் அவரை தாண்டி இன்னொருவர் செல்வது என்றால் பெரிய கஷ்டம் தான். அதுதான் இன்று டாஸ்க்

தண்ணி மேலே சாகசம்
இந்த டாஸ்க் பார்த்ததும் ரசிகர்கள் பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்தாலும் போட்டியாளர்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலிக்காமல் ஒவ்வொருவராக தண்ணிக்குள் விழுவதை பார்க்கும்போது அப்போ யார் இந்த வார எலிமினேஷன் ஆக இருப்பார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் கூறிவருகின்றனர். அதிலும் சரணின் சோர்ந்துபோன முகத்தைப் பார்க்கும்போது அவருடைய ரசிகர்களால் தாங்க முடியவில்லையாம். அவருக்குத்தான் அதிகமான ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகிறார்கள். இவரை எந்த மாதிரி பார்க்க முடியவில்லை என்று ரொம்பவே பீல் பண்ணுகிறார்கள் எப்படியோ இன்று இரவு தெரிந்துவிடும் எலிமினேஷன் இருக்கிறதா இல்லையா என்று என சிலர் பொறுமையாக கூறியும் வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications