1000 எபிசோடுகளையும் ஒரே வீடியோவில் காட்டி பீல் பண்ணுன ஃபரீனா... இவருக்குள் இப்படி ஒரு கேரக்டரா?

பாரதிகண்ணம்மா சீரியல் முடிவடைவதை தொடர்ந்து வெண்பவாக நடித்து வந்த ஃபரீனா சீரியலில் மறக்க முடியாத புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் வெண்பாவாக நடித்து வந்த ஃபரீனா உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரைக்கும் மறக்க முடியாத நிகழ்வுகளை அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் வெண்பாவாக இருந்து தான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்று நெகிழ்ச்சியோடு பதிவு ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

முதல் பாகத்தின் முடிவு

முதல் பாகத்தின் முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி சுமார் 4 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு பக்கம் இந்த சீரியலை அதிகமான நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும், இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அதனால்தான் இந்த சீரியல் விஜய் டிவியில் டாப் சீரியல் ஆக இருக்கிறது. டிஆர்பியில் இந்த சீரியல் முன்னணியில் இருப்பதை தொடர்ந்து இந்த சீரியல் இத்தனை வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைய இருக்கிறது என்று அபிசியல் ஆக அறிவித்திருக்கின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் போதும் விலகவில்லை

கர்ப்பமாக இருக்கும் போதும் விலகவில்லை

ஏற்கனவே இதற்கு முன்பு பலமுறை இந்த சீரியல் முடிவடைந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது ஆனால் அது நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தான் சீரியலின் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் ஆரம்பத்தில் இருந்தே சேர்த்து விடக்கூடாது என்று நான்கு வருடங்களாக வில்லத்தனத்தை செய்து வந்த வெண்பா கேரக்டரில் நடித்து வந்த ஃபரீனா இந்த சீரியலை குறித்தும் இந்த வெண்பா கேரக்டரை குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் போது கர்ப்பமாக இருந்த நிலையிலும் இவர் கடைசி நேரம் வரைக்கும் இந்த சீரியலில் நடித்துவிட்டு தான் குழந்தையும் பெற்றெடுத்தார்.

மொத்தமும் ஒரே வீடியோவில்

மொத்தமும் ஒரே வீடியோவில்

இவருக்கு பதிலாக வேறு யாரேனும் வருவார்களா என்று பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையிலும் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று குழந்தை பிறந்த பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் வெண்பாவாக மிரட்டத் தொடங்கி விட்டார். இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவடைவதால் ரசிகர்களை விடவும் இவர்தான் அதிகமாக வருத்தத்தில் இருக்கிறார். அதனால் தான் இவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரி நண்பர்களே வெண்பாவிடம் விடைபெறும் நேரம் என்று கூறி தனக்கு வாய்ப்பளித்த சீரியல் அணியினருக்கும், இதுவரைக்கும் தனக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் நன்றி கூறியிருக்கிறார். அது மட்டும் அலலாமல் இத்தனை வருடங்களாக இந்த சீரியலில் தான் அதிகமாக ரசித்த பிடித்துப்போன புகைப்படங்களையும் ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஆயிரம் எபிசோடுகளாக மிரட்டி கொண்டிருந்த மொத்த கதையையும் ஒரே வீடியோவில் காட்டி விட்டீர்களே என்று கருத்து கூறி வருகிறார்கள்.

வெளியாகாத கிளிப்ஸ்கள்

வெளியாகாத கிளிப்ஸ்கள்

சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த இதுவரைக்கும் வெளியாகாத பல புகைப்படங்களை மற்றும் வீடியோக்கள், சொதப்பல் வீடியோக்களையும் தொடர்ந்து ஃபரீனா வெளியிட்டு வருகிறார். டாட்டா சொல்றதுக்கு முன்னாடி பாரதி கண்ணம்மாவில் இருந்து பார்க்காத சில படங்கள் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் செய்யவும் என்று அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இன்னும் சில ரசிகர்கள் நாங்கள் வெண்பாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் என்று தங்களுடைய பீலிங்கை கொட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+