கையை பிடிச்சு காதல் பேசிய ராஜு....இது எப்போ தொடங்கிச்சி.. கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் மட்டும் பிரபலம் அல்ல காதல் காட்சிகளுக்கும் பிரபலம் தான்.

ஒவ்வொரு சீசனிலும் ஒரு ஜோடிக்குள் காதலை பற்ற வைத்து விடுகிறார்கள்.

உண்மையில் அப்படி எதுவும் இருக்கிறதா, இல்லை கண்டென்ட்டுக்காக இவர்கள் செய்யும் செயல்கள் ரசிகர்களின் கண்களுக்கு அப்படி தெரிகிறதா என்று தெரியவில்லை.

என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சமில்லை

என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சமில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்தில் இந்த சீசனில் என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சமில்லாமல் ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது. எப்போதுமே ஒருவரை மாற்றி ஒருவர் கலாய்த்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு நிகழ்ச்சியை மீண்டும் பார்க்க தூண்டி வருகிறது. இந்த நிலையில் தற்போது தங்களுடைய சோகமான சொந்த கதையை சொல்லும் டாஸ்க் தற்போது நடந்து கொண்டிருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு நபர்கள் வீதம் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் கதையைக் கூற தொடங்கியிருக்கின்றனர். கதைகளைக் கேட்டு போட்டியாளர்களும், ரசிகர்களும் ஒரு பக்கமாக கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.

இங்கேயும் இப்படியா??

இங்கேயும் இப்படியா??

சீரியலில் தான் அழுகை சீன்களை வைத்து பாடாய் படுத்தி வருகிறார்கள் என்று, ரசிகர்கள் பலர் ரியாலிட்டி ஷோ பக்கம் திரும்பி இருக்கும் நேரத்தில் இங்கேயும் ஒரு டாஸ்க் வைத்து போட்டியாளர்களை அழ வைத்து பார்க்கும் ரசிகர்கள் கதறி வருகின்றனர். இதுக்கு ஒரு எல்லையே இல்லையா என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்கள் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் செய்யும் சேட்டைகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் அதில் அதிகமான பெண் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இது இளைஞர்களுக்கு செம என்டர்டைன்மென்ட் ஆக இருந்து வருகிறது.

ரசிகைகளுக்கு வருத்தம்தான்

ரசிகைகளுக்கு வருத்தம்தான்

பெண் ரசிகைகளுக்கு பரிச்சயமான ஆண்கள் யாரும் இல்லையே என்று ஃபீல் பண்ணி கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய அழுத்தத்தை குறைக்கும் விதமாக சின்னத்திரையில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ராஜு அடிக்கடி கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் ஆக இருந்தாலும் சரி பேசும் வார்த்தைகளாக இருந்தாலும் சரி பரபரப்பை தான் கூட்டி வருகிறது. கவலையோடு இருப்பவர்களையும் சிரிக்க வைத்துவிடும் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருக்கிறது. ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் வந்தாலே ஐய்யோ இவர்களா என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் இவர் வந்தால் கைதட்டி ஆர்ப்பரித்து வருகின்றனர்.

செருப்போடு காதலா

செருப்போடு காதலா

இவர் ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தாலும் எப்போதுமே தனது கேரக்டரை மாற்ற முடியாது, என்பதை பிக்பாஸ் வீட்டிற்குள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஒரு எபிசோட்டில் இவரும் ஐக்கியும் காதல் ரொமான்ஸ் பண்ணி கொண்டிருக்கின்றனர். இவர்களின் காதலை பார்த்ததும் ரசிகர்கள் பலர் என்ன...என்று கவனிக்காமல் இங்கு என்ன காதலை தொடங்கிவிட்டார்களா?? இவ்வளவு சீக்கிரமாக பத்தி கிச்சா என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால் அது அவர்கள் அனைவரும் என்டர்டைன்மென்ட் கொடுக்கும் விதமாக சூட்டிங் எடுப்பது போல செருப்பை கையில் வைத்துக்கொண்டு காதல் கீதம் பாடிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் நெருப்பு, பருப்பு என்று இவர்கள் ரைமிங்கில் பேசுவது வேற லெவல் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+