வைரமுத்து நல்ல மனுஷனே கிடையாது! எங்களால வளர்ந்தவரு! வாயை மூடிட்டு இரு! இளையராஜாவுக்காக பொங்கிய தம்பி
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தனது இசை தான் பெரியது என்று இசையை உருவாக்கியவருக்கு தான் பாடல் சொந்தம் என்றும் பாடல் வரிகள் எல்லாம் பெரிய விஷயம் இல்லை என காப்பரிமை கூறி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இது பற்றி "படிக்காத பக்கங்கள்" என்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து "இசை பெரியதா? பாடல் பெரியதா" என்று இளையராஜாவைத் தாக்கி பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் இளையராஜாவிற்காக அவருடைய தம்பி கங்கை அமரன் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இளையராஜா தன்னுடைய இசை தான் பெரியது என்று வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அதை விசாரித்த நீதிபதிகள் சமீபத்தில் பாடல் ஆசிரியரும் பாடல்களும் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்று கேள்வியை எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் அதேபோன்ற கருத்தை பாடல் ஆசிரியர் வைரமுத்து எழுப்பி இருந்தார். வைரமுத்து மற்றும் இளையராஜா இருவரும் ஆரம்பத்தில் அதிகமான பாடல்கள் சேர்ந்து கொடுத்திருந்தனர்.
அந்த பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இப்போது பிரிந்து இருக்கின்றனர். இருவரும் இணைந்து எந்த பாடல்களும் கொடுக்காமல் இருக்கின்றனர். இந்த நிலையில் இளையராஜாவிற்கு எதிராக வைரமுத்து கருத்து தெரிவித்ததை கண்டித்து கங்கை அமரன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் வைரமுத்து இந்த அளவிற்கு உயர்ந்ததுக்கு காரணமே நாங்க போட்ட பிச்சை தான்.
இல்லை என்றால் அவர் ஒரு ஆளாகவே ஆகி இருக்க மாட்டார். ஒரு நிலத்தை கொடுத்து இந்தாப்பா வச்சுக்கோ என இளையராஜா தனது இசையை கொடுக்க, அதில் வந்து அமர்ந்து கொண்டு அந்த நிலம் உருவானது என்னால்தான் என மடத்தனமாக கூறுகிறார் வைரமுத்து. அதோடு வைரமுத்து நல்ல பாடலாசிரியர் தான். ஆனால் அவர் நல்ல மனிதர் கிடையாது. அவருக்கு கொஞ்சமும் நன்றி உணர்வு இருந்திருந்தால் இப்படி இளையராஜா பற்றி தப்பாக பேசி இருக்க மாட்டார்.
பாடல் பெரியதா? இசை பெரியதா? என கேட்டிருக்க மாட்டார் என்று கங்கை அமரன் கூறியிருக்கிறார். அதோடு இளையராஜாவின் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடலுக்கு டியூன் போட்டு கொடுத்த நிலையில் அதற்கு வரிகளை எழுதிய வைரமுத்துவிற்கு பாடல் வரிகள் நல்லா இருக்கு என சினிமா சாங்ஸ் இளையராஜா கொடுக்கவில்லை என்றால் இந்நேரம் வைரமுத்து என்பவர் யார் என்றே பலருக்கும் தெரிந்து இருக்காது.
வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாக தாக்கி பேசிய நிலையில் தன்னுடைய அண்ணனுக்காக கங்கை அமரன் நேரடியாகவே வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு அந்த வீடியோவில், "இதற்கு மேல் வைரமுத்து வாய் திறந்தால் அவருக்கு நடப்பதே வேறு" என்று மிரட்டும் தோணியிலும் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.
அதோடு இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தைப் பேசக் கூடாது. அவர் எப்படி அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறாரோ அப்படி நீங்களும் கூட்டம் போடுங்கள்... உங்கள் புத்தகத்தை வாங்கினால் தான் விழாவுக்கு வருவேன் என்று சொல்லுங்கள்... என்னமோ செய்துகொள்ளுங்கள். உங்களை வாழவைத்தவர்கள் பாரதிராஜாவும் இளையராஜாவும் தான். இளையராஜாவின் படத்தை வைத்து நீ தினமும் கும்பிடவேண்டும்" எனக் கூறியுள்ளார்.
கடைசியாக அந்த வீடியோவில் இதற்கு வைரமுத்து எனக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் இனி அவர் எந்த கருத்தும் இளையராஜாவுக்கு எதிராக பேசக்கூடாது. அவருக்கு தம்பி நான் இருக்கிறேன் என்று கங்கை அமரன் பேசி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications