“ரெட் கார்ட்” கொடுங்க கமல்.. திருநங்கைக்கு அவமரியாதை! அஜீம் மீது கடும் கோபத்தில் பிக்பாஸ் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சீரியல் நடிகர் அஜீம் கடந்த வாரம் நடிகை ஆயிஷாவை ஒருமையில் அவமரியாதை கொடுக்கும் வகையில் திட்டியது சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது திருநங்கை போட்டியாளரான ஷிவினின் பாவனையை விமர்சிக்கும் வகையில் நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.

பிக் பாஸ்
குறிப்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தது. ஆண்டுக்கு 106 நாட்கள் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் ராஜு வெற்றிபெற்றார்.

பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6 வது சீசன் கடந்த 3 வாரங்களுக்கு முன் தொடங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் விஜய் டிவி பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், நடன இயக்குநர்கள், மாடல்கள், இசையமைப்பாளர்கள், நகைச்சுவை கலைஞர்கள், யூடியூப், டிக்டாக் பிரபலங்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் இருவர் என 20 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

அஜீம்
இந்த போட்டியில் பிரபல சீரியல் நடிகர் அஜீம் கலந்துகொண்டு இருக்கிறார். இவர் தொடக்கத்தில் இருந்த சக போட்டியாளர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும், பேசுவதை செயல்பாட்டில் காட்டுவதில்லை எனவும் வீட்டுக்கு உள்ளேயும், ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

பெண்ணுக்கு அவமரியாதை
குறிப்பாக தனது கருத்தை எதிர்க்கும் நபர்களை நோக்கி கத்துவதையும், மிரட்டுவதையும், தரக்குறைவாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் நடிகை ஆயிஷாவை நோக்கி ஒருமையில் பல முறை அவமரியாதையாக பேசினார் அஜீம்.

விக்ரமனுடன் மோதல்
அஜீமின் இதுபோன்ற செயல்பாடுகளை பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவருமான விக்ரமன் தொடர்ந்து கண்டித்து வருகிறார். இதனால் அடிக்கடி அஜீமுக்கும் விக்ரமனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி வருகிறது. அஜீம் விக்ரமனை அவமதிக்கும் வகையில் ஒருமையிலும் அரசியல்வாதி என்று இழிவுபடுத்தியும் பேசினார்.

எம்.எல்.ஏ
இந்த நிலையில் சக போட்டியாளர்களுடன் அமர்ந்து விக்ரமன் பற்றி புரணி பேசிய அஜீம், "விக்ரமன் ஏன் என்னிடம் சரியாக பேசவில்லை என்றால், அவன் உறுப்பினராக உள்ள கட்சியில் என் அம்மாவின் உடன் பிறந்த சகோதரர் எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் கட்சியின் துணை பொதுச்செயலாளர்." என்று கூறினார்.

கண்டித்த கமல்
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜீமின் செயல்பாடுகளை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்தார். சக போட்டியாளர்களும் அஜீமுக்கு ரெட் கார்டு கொடுத்தனர். இதனால் தனது தவறை ஒப்புக்கொண்டதாக அறிவித்த அஜீம், இந்த வாரமும் திருந்தாமல் பழைய தவறையே செய்து வருகிறார்.

தனலட்சுமியை தள்ளிவிட்ட அஜீம்
சாமானிய மக்கள் தரப்பில் இருந்து அழைத்து வரப்பட்ட தனலெட்சுமி மற்றும் திருநங்கையான ஷிவினை தொடர்ந்து அவமரியாதை செய்து வருகிறார் அஜீம். தனலட்சுமியிடம் நீயெல்லாம் பெண்ணா? என்று கோபமாக அதட்டியது தொடங்கி அவரை தள்ளிவிட்டது அவரை அஜீமின் செயல்பாடுகள் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

திருநங்கைக்கு அவமரியாதை
அதேபோல் ஷிவினின் நடை பாவனைகளை அவர் முன்பே அவமதிக்கும் வகையில் அஜீம் செய்து காட்டியது பலரை முகம் சுளிக்க வைத்தது. இதனை மற்ற போட்டியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க விக்ரமன் மட்டும் கோபமாக அஜீமை கண்டித்து நிறுத்துமாறு கூறினார். இதற்காக விக்ரமனிடம் அஜீம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications