இவர்தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வின்னர்.. அடித்து சொல்லும் பிரபலங்கள்.. ஓ.ஓ.அதுதான் காரணமாம்!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த முறை வின்னர் ஆவதற்கு தகுதி இந்த ஒரு போட்டியாளருக்கு தான் இருக்கிறது என்று இதற்கு முந்தைய போட்டியாளர்களில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகையும் அரசியல் பிரபலமாக இருக்கும் காயத்ரி ரகுராம் கூறி இருக்கிறார்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய குயின்சியும் அதே போட்டியாளரின் பெயரை கூறியதால் சமூக வலைதளத்தில் இரு வேறு வேறுபட்ட கருத்துக்கள் எழுதி வருகிறது.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆதரவும் எதிர்ப்பும்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 21 போட்டியாளர்கள் ஆரம்பத்திலே அறிமுகமானார்கள். இந்த சீசனில் பல்வேறு தரப்பட்ட போட்டியாளர்களும் கலந்து கொண்டதால் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இதில் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரத்திற்குள்ளே என்னதான் வீட்டுக்குள்ளே சண்டையோடு கலவரம் செய்து வந்தாலும் அசீவுக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமாக ஆதரவு பெருக தொடங்கி விட்டது. என்னதான் போட்டியாளர்கள் அதிகமாக அசீமுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தாலும், பிரபலங்கள் பலரும் அவர் இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்க முடியாது என்று அடித்து கூறி வருகிறார்கள்.

சீரியல் நடிகர்களின் குற்றச்சாட்டு

சீரியல் நடிகர்களின் குற்றச்சாட்டு

சீரியலில் நடிக்கும் போதே சக நடிகர்களிடம் இவர் திமிராக நடந்து கொண்டார். யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டார் என்று இவரைக் குறித்து நடிகைகள் ஒரு பக்கம் இவருக்கு எதிராக பேசி வருகின்றனர். அதே நேரத்தில் அசிமுக்கு இணையாக பிக் பாஸ் வீட்டிற்குள் விக்ரமனுக்கு ஆதரவு இருந்து வருகிறது. விக்ரமன் ஒரு ஜர்னலிஸ்ட் ஆக இருந்தாலும் ஒரு நடிகராகவும் அரசியல்வாதியாகவும் பல்வேறு முகங்களை கொண்டிருக்கும் இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமமான நிலையிலிருந்து அசீம் மற்றும் விக்ரமன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பட்ட ரசிகர்களும் அடிக்கடி கருத்து மோதல்களில் ஏற்பட்டு வருகின்றனர்.

காயத்ரியின் கருத்து

காயத்ரியின் கருத்து

இந்த நிலையில் இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இதைக் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளராகவும், ஒரு நடிகையாகவும் நடன மாஸ்டராகவும், இருக்கும் காயத்ரி ரகுமான் பேசி இருக்கிறார். அதில் இந்த முறை கண்டிப்பாக விக்ரம் தான் டைட்டில் ஜெயிக்க வேண்டும். அவர் தான் சரியாக விளையாண்டு வருகிறார். அசீம் ஒரு நெகட்டிவ் கேரக்டரோடு தான் ரசிகர்களின் மத்தியில் பாப்புலராக இருக்கிறார். அவருக்கு டைட்டில் கொடுத்தால் அவரைப் போலவே நாமும் செய்தாலும் அதைத்தான் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணம் தான் ரசிகர்களின் மனதில் தோன்றிவிடும் என்று கூறியிருக்கிறார்.

குயின்சி யின் கருத்து

குயின்சி யின் கருத்து

காயத்ரியை தொடர்ந்து அவரைப் போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் வெளியேறிய குயின்சியும் கருத்து தெரிவித்திருக்கிறார். அசீம் வெளியே இருந்து பார்ப்பதை விடவும் உள்ளே இருந்து பார்க்கும்போதுதான் அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு மோசமானது என்று தெரியும். அவர் தன்னுடைய விளையாட்டை விளையாடுகிறேன் என்று யாரிடமும் மரியாதை இல்லாமல் தான் நடந்து கொள்வார் என்று அதனாலே விக்ரமன் டைட்டில் ஜெயித்தால் தான் சிறப்பு அவர்தான் ஜெயிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இவர்கள் இருவருடைய கருத்தை கேட்ட ரசிகர்கள் பலரும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் விக்ரமனுக்கு ஆதரவாக பதிவிட்டு வரும் நிலையில், பலர் பிரபலங்கள் எல்லாம் அசீமுக்கு எதிராக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+