சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் கோபி.. பாக்கியா முடிவால் குடும்பத்திற்கு அதிர்ச்சி.. இப்படி ஒரு மாற்றமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபிக்கு பணம் அனுப்பியதை கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இதுவரைக்கும் பாக்யாவின் வீட்டில் அதட்டி அதிகாரம் செய்து வந்த கோபி தற்போது சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் தவித்து வருகிறார்.

பாக்யா முடிவால் குடும்பத்தினர் கோபம்

பாக்யா முடிவால் குடும்பத்தினர் கோபம்

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், பாக்யா வீட்டில் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது பாக்கியா கோபிக்கு 40000 அனுப்பிவிட்டேன் என சொல்லுகிறார். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எழில் மட்டும் சூப்பர் அம்மா என்று சொல்கிறார் .ஈஸ்வரி பாக்யாவின் முடிவை நினைத்து கோபத்தில் அவன் ஏதோ கோபத்தில் கேட்டால், நீயும் ஏதோ கோபத்தில் பதில் சொன்ன, அதுக்காக பணம் அனுப்புவியா? என்று கேட்கிறார். அவன் ஜாலியா போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு லாபம் எல்லாம் அவனுக்குத்தான் உனக்கு நஷ்டம் என பேசுகிறார்.

பாக்கியா கொடுத்த விளக்கம்

பாக்கியா கொடுத்த விளக்கம்

அவரு அப்போ கேட்டாரு நான் அதற்கு சரி என்று சொன்னேன். அதனால் இப்போது பணம் அனுப்பி விட்டேன். எனக்கு இப்பதான் சந்தோஷமாக இருக்கிறது. என்னால் ஒன்றும் முடியாது என்று இருந்த நிலையில் தற்போது என்னுடைய சொந்த உழைப்பினால் நான் எல்லாவற்றையும் மாற்றி விட்டேன். அது எனக்கு பிடித்திருக்கிறது என்று பாக்கியா அனைவருக்கும் விளக்கம் கொடுக்கிறார் .அப்போது ராமமூர்த்தி உன்னை கோபி விவாகரத்து செய்ததற்கு நீ நஷ்ட ஈடு கேட்டு இருந்தால் அவன் உனக்கு எவ்வளவோ பணம் தர வேண்டும். நீ அதையெல்லாம் விட்டுவிட்டு அவன் கேட்ட பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறுகிறார்.

அப்போ சொன்ன பொய்க்கு இப்போ தண்டனை

அப்போ சொன்ன பொய்க்கு இப்போ தண்டனை

அடுத்த பக்கம் கோபிக்கு ராதிகா நூடுல்ஸ் செய்து கொடுக்கிறார். அதை சாப்பிட சொன்னதும் கோபி இதுதான் சாப்பாடா? என்று அதிர்ச்சியாகி கேட்கிறார் .ராதிகாவிடம் உனக்கு வேறு சாப்பாடு செய்ய தெரியாதா? என்று கேட்கிறார். இதனால் கடுப்பான ராதிகா உங்களுக்கு என்ன தான் பிடிக்கும் .நீங்கதான் வீட்டு சாப்பாடு சாப்பிட மாட்டேன் என்று சொல்லி இருக்கிறீர்களா? வெளியே தான் ஃபுல்லாவே சாப்பிடுவேன் என்று சொன்னதும் ,உங்களுக்கு வெளியே சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு அதனால்தான் வீட்டு சாப்பாட்டோட அருமை தெரியல. எனக்கு முழு நேரமும் கிச்சனில் இருந்து விதவிதமாக செய்வது பிடிக்காது சிம்பிளா சமைச்சுட்டு வந்துருவேன் என்று சொல்கிறார்.

 மயூ கேட்ட கேள்வி

மயூ கேட்ட கேள்வி

ராதிகாவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபி அவர் சொல்வதற்கு எல்லாம் ஆமாம் சாமி போட்டு வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அடுத்ததாக எழில் பாக்கியவிடம் அமிர்தா வீட்டில் நடந்ததை பற்றி கூறுகிறார். அவர்களுக்கு நீ தாம்மா நம்பிக்கை கொடுக்கணும் என்று எழில் சொன்னதும், நான் நம்பிக்கை கொடுக்க முடியாது. நீதான் அவர்களுக்கு புரிய வைக்கணும். நம்மளுடைய சூழ்நிலையில் இப்ப வந்து தாத்தா பாட்டிகிட்ட இதை பத்தி பேச முடியாது. இரண்டு பேரும் கொஞ்ச நாள் காத்து இருக்க தான் ஆக வேண்டும் என்றும் அதுபோல அவங்களுக்கு நீ வீட்டுக்கு போயிட்டு வரது தப்பாக தெரிந்தால் நீ அங்கே போகாதே என கூறுகிறார். இதனால் ஏமாற்றத்தில் எழில் இருக்கிறார். அடுத்த பக்கம் கோபி சீக்கிரமாக சென்று பெட்டில் இடம் பிடித்துக் கொள்கிறார் .ராதிகா என்ன சீக்கிரமா வந்துட்டிங்க என கேட்க, இல்லன்னா என்னை தரையில் தள்ளிடுவீங்க என கோபி கூறுகிறார். அப்போது மயூ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என கேட்கிறார். அதற்கு கோபி உன் கண்ணு முன்னாடி தானே தாலி கட்டினேன் என கூறுகிறார் .அப்புறம் எதுக்கு நான் உங்களை அங்கிள் என்று கூப்பிடனும், டாடி என்று கூப்பிடவா? என கேட்கிறார் .இதைக் கேட்டதும் இருவரும் ஷாக் ஆகின்றனர். இத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு முடிந்து இருக்கின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+