திறமைக்கு மதிப்பு கொடுத்து விஜய் டிவி பண்ணியிருக்கும் உருப்படியான வேலைக்கு பெருகும் ஆதரவு
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் இந்த வாரம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர், நிகழ்ச்சி பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியும் அவ்வாறு வெற்றியை பெறுமா..!?என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பல்வேறு ஊர்களிலிருந்து பல குழந்தைகள் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் குறிப்பாக கவனிக்கப்பட கூடியவர் ஸ்ரீமதி.

விஜய்டிவி ரியாலிட்டி ஷோ
விஜய் டிவியில் கொஞ்ச நாட்களாக எந்த ரியாலிட்டி ஷோ வாக இருந்தாலும், அனைத்து சென்டர் மக்களையும் கவர வேண்டும் என்பதற்காக எல்லாச் ஷோக்களிலும் மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்ட போட்டியாளர்களை பங்கு பெறச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த ஐடியா சேனலின் வெற்றிக்கு ஓரளவு கை கொடுத்திருக்கிறது. இதே ஐடியாவை தான் தற்பொழுது பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு இருக்கும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் ஸ்ரீமதி என்ற போட்டியாளரை களம் இறக்குவதன் மூலம் மீண்டும் முயற்சித்து இருக்கிறது விஜய் டிவி.

இணையத்தில் பிரபலமான இளம் பாடகி
சமூக வலைதளங்களில் இருப்பவர்களுக்கு ஸ்ரீமதியை பற்றி அறிமுகப்படுத்தத் தேவையில்லை அந்த அளவுக்கு இணையத்தில் பிரபலமானவர் தான் இந்த இளம் பாடகி ஸ்ரீமதி. நாகப்பட்டினம் மாவட்டம் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த செல்வ குமார் என்பவரின் மகள்தான் ஸ்ரீ சக்தி மற்றும் ஸ்ரீமதி. இவர்கள் விளையாட்டாக வீட்டில் பாடிக் கொண்டிருப்பதை பார்த்த அவரது தந்தையார் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்தார்

முறையாக சங்கீதம் கற்கவில்லை
முறையாக சங்கீதம் கற்காவிட்டாலும் கேட்ட பாடல்களை அப்படியே ஸ்ருதி மாறாமல் பாடுவதில் திறமை பெற்றிருந்த இந்த சகோதரிகளின் பாடல்கள் சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்தது. மேலும் மேலும் பாடல்கள் பாடப்பாட இவர்களுக்கான ரசிகர்கள் கூட்டம் பெரிதாக மாறியது .இதன் காரணமாக உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இவர்களை நிகழ்ச்சிகளில் பாட அழைத்து சிறப்பித்தனர்.

எளிமையான குடும்பப் பின்னணி
எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட இந்த சகோதரிகள் வீடியோவில் அனைவரையும் அணுகும் முறையே அழகாகவும் எளிமையாகவும் இருக்கும். "நாங்கள் தான் உங்க ஸ்ரீ சகோதரிகள்" என்று அந்த மழலைச் செல்வங்கள் கூறும் மழலை குரலுக்கு அத்தனை லைக்குகள் கொடுக்கலாம். திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கான தகுதியை மேலும் வளர்த்து அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு மிகப்பெரிய பிளாட்பார்ம் அமைத்துக் கொடுக்கும் விஜய் டிவி. ஸ்ரீமதி யை போட்டியாளராக களத்தில் இறக்கி இருப்பது பாராட்டத்தக்க விஷயம். ஸ்ரீமதி இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்காலத்தில் ஒரு நல்ல பாடகியாக மாற விஜய் டிவி உடன் இணைந்து ரசிகர்களாகிய நாமும் அவருக்கு ஆதரவளித்து வாழ்த்துவோம்.அது ஸ்ரீமதி போன்ற திறமையுள்ள எளிமையான குடும்பப் பின்னனியை சேர்ந்தவர்களுக்கு தங்களாலும் சாதிக்க முடியும் என்று நினைத்து முயற்சி செய்வதற்கு தூண்டுகோலாய் அமையும்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications