விளையாட்டு சொல்லிக்கொடுத்த பிரியங்காவின் தலையிலேயே கையை வைத்த தாமரை
சென்னை: ஆரம்பத்தில் விளையாட்டு புரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த தாமரை தற்போது கலக்கி வருகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தாமரை குழம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு ஆறுதலும், அறிவுரை கூறிய பிரியங்காவிற்கு இப்போ ஆப்பு வைத்துவிட்டார் என்று கலாய்த்து வருகின்றனர்.
ஒரு வழியா விளையாட்டை புரிந்து தாமரையும் விளையாட தொடங்கிவிட்டார் என்று அவருடைய ரசிகர்கள் உசுப்பேத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் திணறிய தாமரை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒருசில போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலே கவனத்தை ஈர்த்து விடுகின்றனர். அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர். இவர் வெகுளித்தனமாகவும், கிராமத்து பெண்ணாக செய்யும் செயல்கள் எல்லாமே ரசிகர்கள் ஒருபுறம் ரசித்து கொண்டாலும், மறுபுறம் இவருக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னுடைய முடிவு சரியானதா??இல்லையா??என்று ஆரம்பத்தில் குழம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஆறுதல் கூறி விளையாட்டு நுணுக்கங்களை விளக்கிக் கூறியவர் பிரியங்கா தான்.

அறிவுரை கூறிய பிரியங்கா
பிரியங்கா ஆரம்பத்தில் தாமரைக்கு கூறிய அறிவுரையின் பலனாகத்தான் தற்போது தாமரை தன்னுடைய விளையாட்டை பிரியங்காவின் பக்கம் திருப்பி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். விளையாட்டு என்று வந்துவிட்டால் அதில் யாரையும் பார்க்கக் கூடாது. விளையாட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் நன்றாக புரிந்து ரசிகர்கள் தம்மை ஏற்றுக்கொண்டதால் நன்றாகவே விளையாட்டை விளையாட தொடங்கிவிட்டார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதானா அது??
நேற்றைய எபிசோட்டில் தாமரை, கமல் முன்னிலையில் பிரியங்காவை முகத்துக்கு நேராகவே கருத்து சொல்கிறேன் என்று காலை வாரி விட்டார். இவருடைய பேச்சை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் அறிவுரை சொல்லி கொடுத்தவர்களின் தலையிலே கையை வைப்பதா என்று கலாய்த்து வருகின்றனர். ஒருபக்கம் தாமரையின் விளையாட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ரசிகர்களின் கணிப்பு பலிக்குமா??
என்னதான் பிரியங்காவும், தாமரையும் அடிக்கடி மாற்றி மாற்றி ஆறுதல் கூறி கொண்டிருந்தாலும் போட்டி என்று வரும்போது பிரியங்காவை வம்பிழுத்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாகப் பேசி விடுகிறார் தாமரை. இதை பார்க்கும் ரசிகர்கள் பிரியங்காவை வம்பிழுத்து வார்த்தைகளை வில்லாக பயன்படுத்துவதால் தான் தாமரை வெளியே தெரிவார் என்று நினைத்துக்கொண்டு இப்படி செய்கிறாரா?? என கேட்டு வருகின்றனர். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் தாமரையின் இந்த கவனமான விளையாட்டு இவரை கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருக்கச் செய்துவிடும் என்று கூறிவருகின்றனர்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications