துருதுருவென இருந்த தாமரைச்செல்வி இப்படி மாறிவிட்டாரே..காரணம் இதுதானா??
சென்னை: கிராமத்து பட்டாம்பூச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுற்றிக்கொண்டிருந்த தாமரை செல்வி இப்போது அமைதியின் சிகரமாக மாறிவிட்டார்.
என்னதான் தன்னுடைய சுய குணத்தில் இருந்தாலும் இது தவறு என்று பலரும் கூறியதை தொடர்ந்து தன் மீதே சந்தேகம் வந்துவிட்டதா??என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
வெள்ளந்தியான சிரிப்போடு அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த இவர் தற்போது விரக்தியான சிரிப்போடு இருப்பதை பார்த்து பலர் வேதனை அடைந்து இருக்கிறார்களாம்.

மனதில் பதிந்த முகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பல புதுமுகங்களும் அறிமுகம் இல்லாத நபர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், இந்த ஐந்தாவது சீசனில் மட்டும் அதிகமான புதுமுகங்கள் கலந்துகொண்டிருந்தனர். அதிகம் ரசிகர்களின் மத்தியில் பரிச்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனை தொடர்ந்து தான் தன்னுடைய தொழிலையும் தன்னையும் பிரபலப்படுத்தி கொள்வதற்காக பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் தாமரைச்செல்வியும் ஆவார்.

நாடகக் கலைஞர்
இந்த ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும்தான் ரசிகர்களுக்கு பரிச்சயமான நபர்கள். புதுமுக போட்டியாளர்கள் பலர் இருந்தாலும் தற்போது ஒரு வாரம் முடிந்த நிலையில் பலர் பிரபலம் ஆகி விட்டனர். அவர்களில் ஒருவர்தான் தாமரைச்செல்வியும். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நாடகக் கலைஞராக திருவிழா போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் முன் தங்களுடைய திறமையை நிரூபித்து கொண்டிரந்தார். ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் வந்ததும் இவருக்கு பல ரசிகர்கள்
கிடைத்து விட்டனர்.

வெள்ளந்தியான குணம்
வெள்ளந்தியான பேச்சும், வெகுளித்தனமான சிரிப்பும் தான் இவருடைய அடையாளமாக இருந்து வருகிறது. படபடவென பேசிக் கொண்டிருந்தாலும் 'சாமி சத்தியம்' என்று கூறி தன்னுடைய குழந்தைத்தனமான கேரக்டரை நிரூபித்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை சக போட்டியாளர்களை 'கண்ணு, ஐயா.,சாமி'என்று அழைத்து அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார். ஆனாலும் இவருடைய இந்த வெள்ளந்தியான குணம் ஒருசில போட்டியாளர்களுக்கு இவர் நிஜத்தில் இப்படிதான் அல்லது நடிக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பழைய மாதிரி இல்லையே
இந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாகவும், கலகலப்பாகவும் இருந்தனர். இவரும் இதில் கலந்துகொண்டு என்ஜாய் பண்ணி கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய சின்ன வயதில் இருந்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அது இந்த நிகழ்ச்சியில் மூலமாக கிடைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இவரைப் பற்றி சக போட்டியாளர்கள் பேசியது இவர் மனதை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே நமிதாவுக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஒரு பக்கம் என்றாலும் அக்ஷரா இவரைப் பற்றி பேசியது இவருக்கு மனவருத்தத்தை கொடுத்து, பிறகு இவர் பழைய மாதிரி சிரித்து விளையாடுவதில்லை என்று இவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications