Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணப் பையில் இருந்த 3 லட்சம் மட்டும் இல்லையாம்!? எதிர்பார்க்காத பல லட்சத்தோடு வெளியேறிய கதிர்!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பண பையை எடுத்து வெளியேறியிருக்கிறார் கதிரவன்.

பண பையில் மூன்று லட்சம் மட்டுமே இருந்த நிலையில் அதை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டாரே என்று கதிரவன் ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.

இந்த நிலையில் கதிரவன் மூன்று லட்சம் மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் பெற்ற பண விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

கடைசி நேர ட்விஸ்ட்

கடைசி நேர ட்விஸ்ட்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நேரத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் எதிர்பாராத பல ட்விஸ்ட்கள் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே பல போட்டியாளர்கள் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டு வந்தனர். இந்த வகையில் கடைசி நேரத்தில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து கதிர் பண மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே வந்திருக்கிறார்.

பணப்பெட்டிக்கான எதிர்பார்ப்பு

பணப்பெட்டிக்கான எதிர்பார்ப்பு


பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் அறிமுகமானனர். ஒவ்வொரு வாரமும் ஒரு சில போட்டியாளர்கள் எவிக்டாகி கடைசி வாரத்தில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர் அந்த வகையில் பல வாரங்களாகவே எதிர்பார்த்து இருந்த பணப்பெட்டி டாஸ்க் பதிலாக பண மூட்டை டாஸ்க் நேற்று தொடங்கியது. இதில் மூன்று லட்சம் பணம் வைக்கப்பட்டது. ஏற்கனவே பணப்பெட்டி டாஸ்க் வந்ததும் அதில் பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்பி விட வேண்டும் என்று ஆரம்பத்தில் தான் எதிர்பார்த்த தொகை வந்தால் கிளம்பி விடுவேன் என்று அசீம் கூறி இருந்தால் அதற்கு பிறகு மணிகண்டன் மற்றும் கதிரவன் இருவரும் இந்த பண பெட்டிக்காக பலமுறை பேசிக் கொண்டிருந்தனர்.

 பணமூட்டையை தூக்கிய கதிர்

பணமூட்டையை தூக்கிய கதிர்

இது நிலையில் நேற்று பணமூட்டை வந்தது அதில் ஆரம்பத்தில் மூன்று லட்சம் மட்டுமே பணம் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடைசி ஆறு போட்டியாளர்களில் ஒருவராக இருந்த கதிரவன் அந்த மூட்டையை எடுக்க சென்றதும் அணைத்துப் போட்டியாளர்களும் கதிரை தடுத்து பார்த்தனர். குறிப்பாக ரச்சிதா கதிரவன் பண மூட்டை கயிற்றை கட் பண்ணும் போது கையைப் பிடித்துக் கொண்டு இப்போது இதை கட் பண்ணாதே இன்னும் கொஞ்ச நேரம் பொறுமையாக இரு என்று எவ்வளவோ அறிவுரை கூறிக் கொண்டிருந்தார் ஆனால் எதையும் செவி கொடுத்து கேட்காமல் கதிரவன் மூட்டை தூக்கிக் கொண்டு கிளம்பி இருந்தார். இந்த நிலையில் கதிரவன் செய்தது சரிதான் ஏற்கனவே இந்த வார ஓட்டுகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருக்கும் கதிரவன் எப்படியும் ஜெய்ப்பதற்கு வாய்ப்பு இல்லை அதனால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று சில ரசிகர்கள் கதிரவனை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

மொத்தம் இத்தனை லட்சமா

மொத்தம் இத்தனை லட்சமா

அந்த வகையில் கதிரவனுக்கு இந்த மூன்று லட்சம் மட்டும் அல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் இதுவரைக்கும் 100 நாட்கள் இருந்திருக்கிறார். அதில் ஒரு நாளைக்கு கதிரவனுக்கு 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதாம். அந்த வகையில் நேற்று பணப்பையில் இருந்து மூன்று லட்சத்தையும் சேர்த்து மொத்தம் 23 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. கதிர் உடைய இந்த முடிவை பலரும் பாராட்டி வந்தாலும் அவருடைய ரசிகர்கள் பலர் கதிர் கடைசி வரைக்கும் இருந்து வெற்றியாளராக மேடையில் ஏறவில்லையே என்று பீல் பண்ணியும் வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+