I Hostage Review: ஐபோன் கடைக்குள் துப்பாக்கி! ஆரம்பமே த்ரில்லிங்! படம் எப்படியிருக்கு?
நெட்ஃபிளிக்ஸின் புதிய த்ரில்லர் படமான ஐ ஹோஸ்டேஜின் (I Hostage) துவக்க காட்சியிலேயே ஐ போன் கடைக்குள் ஒரு நபர் தனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை வைத்து கொண்டு கையில் துப்பாக்கியுடன் கடையில் இருப்பவர்களை மிரள விடுகிறார். சிலர் அந்த கடையின் store room அறைக்குள் தப்பிச் சென்று கதவை மூடி கொள்கிறார்கள். ஆனால் ஒரு நபர் மட்டும் அவனிடம் சிக்கிக் கொள்கிறார். இந்த நபர் தான் முழுக் கதையின் மையக் கோடாக மாறுகிறது.
தீவிரவாதியின் நோக்கம் வெறும் கொள்ளையா? அரசியல் காரணமா? அல்லது தனிப்பட்ட பகைமையா? என்ற கேள்விகள் படத்தை முழுவதும் கொண்டுசெல்லுகின்றன. அவன் காவல்துறையிடம் வைக்கும் நிபந்தனைகள், போலீசாரின் பதிலடி நடவடிக்கைகள், மீட்பு முயற்சிகள் - இவை அனைத்தும் டென்ஷனை அதிகரிக்கின்றன.

இயக்கத்தில் ஒரு உண்மையான நேரடி தன்மை உள்ளது. CCTV-style காட்சிகள் போல காட்டப்படும் ஒவ்வொரு ஷாட்டும், நம்மை அந்த இடத்துக்கே இழுத்துச் செல்கிறது. ஹீரோவாக வருபவர் - கையில் சிக்கிய நபர் - அவனது மன அழுத்தம், பயம், தைரியம் ஆகியவை உணர்வுப்பூர்வமாகவும் நம்பத்தகுந்த வகையிலும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
படத்தின் இன்னொரு சிறப்பு, அதன் பின்னணி இசை மற்றும் sound effects ஒவ்வொரு சப்தமும் உண்மையான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. படத்தில் எந்த இடமும் வெறுமனே நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் காரணம் உள்ளது.
தீவிரவாதி கதாப்பாத்திரம் தீவிரமானது மட்டுமல்லாமல், அவனின் நடிப்பு பெரிய பலமாக படத்திற்கு அமைகிறது. அவனது மனநிலை, பதற்றம், அவல நிச்சயமற்ற தன்மை இவை அனைத்தும் கதையின் இறுதிக்கட்டத்தில் வெளிப்படுகின்றன. இந்த நிகழ்வு எதிர்பாராத முடிவுறுகிறது.
இறுதியில் காவல்துறையின் நடவடிக்கை, மீட்பு இயக்கத்தின் வெற்றிக் கதையா அல்லது தோல்விக் கதையா என்பது பார்வையாளர்களை இன்னும் சிந்திக்க வைக்கும். அதே நேரத்தில், சமூகத்திற்குள் பதுங்கி இருக்கும் பயங்களையும், தொழில்நுட்பத்தின் பின்னால் பதுங்கும் பாதுகாப்பு குறைகளையும் வெளிப்படுத்துகிறார் இயக்குனர்.
இந்தப் படம் பிப்ரவரி 2022 இல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தால் ஈர்க்கப்பட்டது, அதில் 27 வயது இளைஞன் ஒரு பல்கேரிய குடிமகனை ஆம்ஸ்டர்டாம் ஆப்பிள் கடையில் பணயக்கைதியாக வைத்து கிரிப்டோவில் அதிக அளவு மீட்கும் தொகையை கோரினார்.என்பதை வைத்து எடுக்க ட்டதாக தகவல்
I Hostage ஒரு சிறந்த thriller. விறுவிறுப்பான தொடக்கத்துடன், ஏற்ற இறக்கங்களும் உணர்ச்சிமிக்க முடிவும் கொண்டிருக்கும் இந்த படம், ஒரு நேர்த்தியான மையக்கருத்தை திரையில் திறமையுடன் விரித்து உள்ளது. நீளமும் நேர்த்தியும் சரியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பார்க்க சுவாரசியமாக உள்ளது. கண்டிப்பாக பார்க்கலாம்.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications