நான் உடைந்து போய் விட்டேன்.. ஆயிரம் பேரின் உழைப்பு! திடீர்னு மாறிய நிலைமை! கண்ணீருடன் விக்னேஷ் சிவன் பதிவு
சென்னை: விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) படம், ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. ஆனாலும் படம் வெளியான பிறகு இப்ப எதிர்பார்த்த அளவிற்கு வசூல் இன்னும் வரவில்லை என்ற நிலையில் விக்னேஷ் சிவன் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
எல்ஐகே படத்தில் க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்திருந்தது கூட படத்திற்கு கூடுதல் ஹைப் கொடுத்தது.

தள்ளிப்போன ரிலீஸ்
இந்த படம் முதலில் போன வருஷம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு மற்றும் பிற காரணங்களால் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே வந்தது. பின்னர் காதலர் தினத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதுவும் நடக்காமல் போன நிலையில், பல மாதங்கள் காத்திருந்த ரசிகர்களுக்கு இறுதியாக ஏப்ரல் 10ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது.
கதை
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி முழுக்க காதல், உறவு, நவீன இளைஞர்களின் மனநிலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதை. அதில் நகைச்சுவை கலந்த சித்தரிப்பும், எஸ்.ஜே. சூர்யாவின் நக்கல் கலந்த வில்லத்தனமும் முக்கிய ஹைலைட்டாக பேசப்பட்டது.பிரதீப் ரங்கநாதன் தனது வழக்கமான இயல்பான நடிப்பில் இளைஞர்களை கவர முயற்சித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஹிட் வைப்ஸ்
படம் வெளியான முதல் சில நாட்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்குகளில் கூட்டமும் இருந்தது. ஆனால் நாளடைவில் படத்திற்கு எதிரான விமர்சனங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. குறிப்பாக திரைக்கதை மற்றும் மேக்கிங் குறித்து சிலர் கடுமையாக விமர்சித்தனர்.
இதன் தாக்கமாக வசூலும் மெதுவாக குறைய தொடங்கியது. தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, படம் இதுவரை சுமார் ₹45 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் நடித்த முந்தைய படங்கள் அனைத்தும் ₹100 கோடி வசூலை கடந்திருந்ததால், இந்த படம் அந்த அளவுக்கு செல்லுமா என்ற சந்தேகம் திரைத்துறையில் பேசப்படுகிறது.
விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு
இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு பெரும் கவனம் பெற்றுள்ளது. அதில் அவர் "படம் வெளியான முதல் நாள்களில் கிடைத்த நல்ல ரெஸ்பான்ஸ் எங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. ஆனால் திடீரென வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் என்னை உடைத்து விட்டது. நான் அழுதேன்... மிகவும் பாதிக்கப்பட்டேன்.
இந்த படத்திற்கு ஆயிரக்கணக்கானவரின் உழைப்பையும் ஒரு புதிய முயற்சியை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் ஒரே நேரத்தில் சிதறியது போல தோன்றியது.
ஆனால் தற்போது மீண்டும் நிலைமையே மாறி வருகிறது. ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து ஆதரவு அளிக்கிறார்கள். நல்ல விமர்சனங்களும் வர ஆரம்பித்துவிட்டது. இந்த அன்புக்கு நன்றி" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ரியாக்ஷன்
இந்த பதிவுக்கு ரசிகர்கள் கலவையான பதில்களை அளித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் "படம் நல்ல எண்டர்டெயின்மெண்ட் தான், ஓவரா விமர்சனம் வந்துடுச்சு" என்று ஆதரவு தெரிவிக்க,மற்றொரு தரப்பினர் "கதை நல்லதுதான், ஆனால் திரைக்கதை தான் சரியாக வேலை செய்யவில்லை" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இனி என்ன ஆகும்?
தற்போது படம் மீண்டும் ஓரளவு ரீகவரி அடைகிறது. என்றாலும்,பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவிலான வெற்றி அடையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
விக்னேஷ் சிவனுக்கு இந்த படம் மிக முக்கியமான ஒன்று. அவர்மீது இருந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க இந்த படம் உதவும் என்று எதிர்பார்த்த நிலையில், இப்போது அது ஒரு 'மிக்ஸ் ரிசல்ட்' படமாக மாறியுள்ளது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - ஆரம்பத்தில் ஹிட் பாதையில் சென்ற படம், விமர்சனங்களால் தடுமாறி, தற்போது மீண்டும் தன்னை நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது.













Click it and Unblock the Notifications