சிறகடிக்க ஆசை: விஜயா ஆணவத்தை அடக்கிய முத்து.. சத்யா பற்றி சிந்தாமணிக்கு தெரிந்த உண்மை! கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 16ஆம் தேதிக்கான எபிசோடில், சிந்தாமணிக்கு மீனாவின் தம்பியை தன் தன்னுடைய மகள் காதலிக்கிறாள் என்ற விஷயம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விஜயாவின் திமிருக்கு முத்து சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவருக்கும் ஆறு மாதத்திற்கு விவாகரத்து வழக்கை நீதிபதி தள்ளி வைத்திருக்கிறார். ஆனால் இதை விஜயாவும் மனோஜும் மறைத்து அமெரிக்க பெண்ணுடன் மனோஜ்க்கு எங்கேஜ்மென்ட் நடத்தி முடித்து இருக்கின்றனர். அதுபோல பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் மீனா ஜெயித்து விட்டதால் அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று சிந்தாமணி பிளான் போட்டு இருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் (Siragadikka Aasai Serial April 16 Episode), சிந்தாமணி பற்றி ஒரு உண்மை மீனாவின் தம்பி சத்யாவிற்கு தெரிகிறது. அதாவது மீனாவின் தம்பி சத்யாவும், சிந்தாமணியின் மகள் ரேகாவும் காதலித்து வருவது ஏற்கனவே தெரிந்ததுதான். இந்த நிலையில் ரேகா, சத்யாவை அவன் வேலை செய்யும் இடத்திலேயே சந்தித்து ஒரு பெரிய உண்மையை சொல்லிவிடுகிறாள். "நான் சிந்தாமணியின் மகள் தான்" என்று சொன்னதும் சத்யா அதிர்ச்சி அடைந்து போகிறான். உடனே இந்த காதல் சரியாக முடியாது என்று சொல்லிவிடுகிறான்.

அதாவது, "என் அக்கா மீனா இவ்வளவு கஷ்டப்பட காரணம் உங்க அம்மாதான்... தேர்தல் சமயத்தில் அவளை கத்தியால் குத்தியது கூட உங்க அம்மாவின் வேலை" என்று நேராகச் சொல்லிவிடுகிறான்.

இதைக் கேட்ட ரேகா அமைதியாக "நாம இப்படி முடிவு பண்ணிக்காம, உங்க அக்காவிடமும் மாமாவிடமும் பேசிப் பார்ப்போம்" என்று சமாளிக்க முயற்சி செய்கிறாள்.

தப்பித்த சத்யா

அதற்குப் பிறகு இருவரும் வெளியே செல்கிறார்கள். மீனா தேர்தலில் ஜெயித்ததுக்கு கேக் வாங்கணும் என்று நினைத்து கடைக்குப் போகிறார்கள். அங்கேயே சிந்தாமணி இவர்களை ஜோடியாக பார்த்துவிடுகிறாள். தன் மகள் சத்யாவுடன் இருப்பதை பார்த்ததும் சந்தேகமாக பின் தொடர்கிறார். ஆனாலும் சத்யாவும் ரேகாவும் எப்படியோ சிந்தாமணியிடம் சிக்காமல் தப்பித்துக்கொள்கிறார்கள்.

விஜயாவின் திமிரு

மற்றொரு பக்கம் விஜயா வீட்டில் வேறு சம்பவம் நடக்கிறது. சில பெண்கள் கூட்டமாக வந்து மீனாவை பார்க்கணும் என்று சொல்கிறார்கள். விஜயா "இங்க அப்படி யாரும் இல்ல" என்று மறுக்கிறார். அப்போ அண்ணாமலை வந்து அவர்களை உள்ளே கூட்டிக்கொண்டு போய் உட்கார வைக்கிறார்.

பிறகு மீனா வந்து "என்ன பிரச்சனை?" என்று கேட்க, அந்த பெண்கள் "சிந்தாமணியின் ஆட்கள் எங்களை வியாபாரம் செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்கள், நீங்க உதவி செய்யணும்" என்று கேட்கிறார்கள்.

அதுக்குள்ளே விஜயா மீனாவை பார்த்து "நீ இவங்களோட இப்படி பேசிக்கிட்டு இருந்தா வீட்டு வேலை யாரு பாக்கப் போறது?" என்று திட்டுகிறார். உடனே முத்து "அதை நான் பார்த்துக்கறேன்" என்று சொல்லிவிடுகிறார். அதற்குப் பிறகு விஜயா, என்னடா ரூம் சுத்தம் பண்ணல என்று சொன்னதும், அதையும் முத்து தான் செய்வேன் என்று சொல்லி செய்கிறான்.

முத்து செய்த செயல்

அதோடு விடாமல், "எனக்கு காபி வேணும்" என்று சொல்லி மீண்டும் விஜயா சோதிக்கிறார். அதற்கும் உடனே முத்து காபி போட்டு கொண்டு வந்து கொடுக்கிறான். இதையெல்லாம் பார்த்த அந்த பெண்கள், "இப்படி ஒரு பொறுப்பான கணவன் கிடைச்சிருக்கு... நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி" என்று மீனாவை பாராட்டுகிறார்கள்.

இதே நேரத்தில் மனோஜ் காட்சியும் காட்டப்படுகிறது. அவர் புதியதாக நிச்சயதார்த்தம் ஆன ஹரிணியுடன் வெளியே சாப்பிட போகிறார். மனோஜ் காரில் போலாம் என்று சொன்னாலும், ஹரிணி "ஆட்டோவில் போகணும்" என்று சொல்கிறார். அதற்கேற்ப மனோஜ் அவளை ஆட்டோவில் அழைத்து செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+