இசைவாணி கூட என்ன பிரச்சனை என்றால்...முதல் முறையாக விளக்கம் கொடுத்த இமான் அண்ணாச்சி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இமான் அண்ணாச்சி முதல் முறையாக வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இசை வாணிக்கும் தனக்கும் என்ன பிரச்சனை என்று தெளிவாக கூறியுள்ளார்.
அண்ணாச்சியின் பேச்சை கேட்டு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

எதிர்பார்க்காத வெளியேற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது சில நேரங்களில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருந்தாலும் பல நேரங்களில் ரசிகர்களுக்கு பிடிக்காமல் அதிர்ச்சி கொடுப்பதாக தான் இருந்து வருகிறது. அந்த மாதிரி தான் தற்போது அண்ணாச்சியின் வெளியேற்றம் அனைவரையும் அதிர்ச்சி ஆக்கிவிட்டது. கடைசி வரைக்கும் இவர் வெளியேற மாட்டார் என்று நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இவருடைய வெளியேற்றம் அதிர்ச்சியான விஷயம்தான். ஆனாலும் வெளியேறும் தருணத்தில் தன்னுடைய காமெடியோடு அவர் சகஜமாக வெளியேறி உள்ளார்.

அதிகரித்த ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தன் ரசிகர்கள் என் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்துள்ளனர் என்று தெரிந்துகொள்ள முடிந்தது. ஏற்கனவே தனக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறிக் கொண்டிருந்த அண்ணாச்சி, தற்போது ரசிகர்கள் அவருக்கு அதிகரித்து இருப்பதை பார்த்து பூரித்துப் போய் உள்ளாராம். அது மட்டுமில்லாமல் உள்ளே நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தான் விளக்கம் கொடுப்பதாக உறுதி கூறியுள்ளார். அதுவும் பல ரசிகர்கள் இவருக்கும் என்ன பிரச்சனை அடிக்கடி உங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கொண்டு இருந்ததே என்று தான் அதிகமானோர் கேட்டு வருகிறார்களாம்.

காண்ட்டாக வைத்த கருத்து வேறுபாடு
பிக் பாஸ் வீட்டிற்குள் பல நேரங்களில் தன்னுடைய காமெடியால் அனைவரையும் ரசிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட இமான் அண்ணாச்சி, ராஜீவுடன் நெருக்கமாக இருந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்கள் பலருக்கும் அடிக்கடி ஃப்ரீ அட்வைஸ் செய்து கொண்டிருந்தார். இவருடைய வயது அனுபவத்தை பொறுத்து பல நேரங்களில் இவருடைய அறிவுரைகளை கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களால் இசைவாணிக்கும், அண்ணாச்சியும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தனர். ஆனால் அது எல்லாமே இசைவாணி நல்லதுக்காகத்தான் நான் அப்படி செய்தேன் என்று கூறியிருக்கிறார்.

இதுதான் காரணமா?
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் அனைவரையும் விடவும் வயதில் குறைந்தவராக இசைவாணி இருந்து வருகிறார். ஆனால் பல நேரங்களில் நாங்கள் பேசும் கருத்தை முழுமையாக கேட்காமல் உணர்ச்சிவசப்பட்டு பேசி விடுகிறார். அதுதான் அவருடைய பிரச்சனை. அதைத்தான் நான் பல இடங்களில் எடுத்துக் கூறினேன். அது எல்லாமே டாஸ்க் விஷயங்களில் மட்டும் தான் இருக்குமே தவிர எங்கள் சொந்த விருப்பு வெறுப்புகள் அங்கு எதுவும் கிடையாது. நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். இப்போ வெளியே வந்த பிறகு கூட அனைவரையும் சந்தித்து பேச ஏற்பாடு செய்திருக்கிறோம். விரைவில் ஒவ்வொருவரிடமும் பேசிவிட்டு வீடியோ வெளியிடுகிறோம் என்று கூறியிருக்கிறார். அதுபோல இசைவாணி யுடனும் நான் பேசும்போது என்னுடைய கருத்து சரிதான் என்று இசை வாணியே கூறுவார் என்று கூறியுள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications