Jananayagan: விஜய்யின் கடைசி படம் ஜனநாயகத்தின் கதை இதுதான்! ஓபனாக பேசிய பிக் பாஸ் ப்ரஜின்
சென்னை: விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' படத்தை சுற்றி இப்போ சினிமா வட்டாரத்துல மட்டும் இல்ல, பொதுமக்களிடமும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் படம் மட்டும் இல்ல... இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதுதான் அதோடு இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் மாதிரி பல முக்கியமான நடிகர்கள் இந்த படத்தில் இருக்காங்க. மேலும, அனிருத் இசைன்னாலே ஒரு பெரிய பிளஸ். அந்த கூட்டணியே படத்துக்கான ஹைப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கு.

2026 பொங்கலை டார்கெட் பண்ணி இந்த படம் ரிலீஸ் ஆகப்போகிறது. சமீபத்தில் மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழா அதுக்கு நல்ல உதாரணம். அட்லீ, பிரபுதேவா மாதிரி பெரிய பெயர்கள் அந்த மேடையில் இருந்ததே, இந்த படத்துக்கு இருக்கும் முக்கியத்துவத்தை காட்டுது. சாதாரணமாக ஒரு படத்துக்காக இப்படி வெளிநாட்டில் பிரம்மாண்டமாக விழா நடத்த மாட்டாங்க. அதுவே 'ஜனநாயகன்' ஒரு சாதாரண கமர்ஷியல் படம் இல்லன்னு உணர்த்துது.
விஜய் அரசியலுக்கு முழுமையாக வரப்போறேன், இனிமேல் நடிக்க மாட்டேன் என்று தெளிவாக சொன்னதுக்குப் பிறகு, இந்த படம் அவரோட சினிமா பயணத்துக்கு ஒரு நிறைவாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் "படம் எப்படி இருக்கும்?", "எவ்வளவு வசூல் செய்யும்?", "என்ன மெசேஜ் சொல்லப்போறது?"ன்னு எல்லாருக்கும் க்யூரியாசிட்டி.
இந்த படத்தின் கதையைப் பற்றி ஏற்கனவே நிறைய வதந்திகள் வந்துச்சு. சிலர் தெலுங்கு நடிகர் பாலையாவின் பழைய படத்தோட கதைன்னு கூட பேசினாங்க. ஆனா அந்த எல்லா பேச்சுக்கும் நடுவுல, இப்போ பிக்பாஸ் பிரபலம் பிரஜின் பேசின விஷயம் தான் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
சென்னை பிரசாத் லேபில் வெளியான 'விடைத்தாள்' குறும்பட நிகழ்ச்சியில் பேசும்போது, பிரஜின் ரொம்ப நேரடியாக சில விஷயங்களை சொல்லியிருக்கார். "பெண்களுக்கு எல்லா இடங்களிலும் தவறு நடக்குது. அதைப் பற்றி பெண்கள் தைரியமாக பேசணும்"ன்னு சொன்னதோடு, 'ஜனநாயகன்' படத்தின் மையக் கரு 'குட் டச் - பேட் டச்' பற்றிதான்னு அவர் கூறியது தான் இப்போ வைரல்.
அதுமட்டுமில்லாமல், "குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் பற்றி சொல்லிக் கொடுக்கணும்"ன்னு அவர் சொன்ன வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், "பொதுவெளியில் உண்மையை உடைத்துவிட்டார்"ன்னு கமெண்ட் போடுறாங்க.
இது உண்மையிலேயே படத்தின் கருவாக இருந்தா, 'ஜனநாயகன்' ஒரு மாஸ் படம் மட்டுமல்ல, சமூக ரீதியாக முக்கியமான ஒரு படம் ஆகும். குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு, சமூக பொறுப்பு மாதிரி விஷயங்களை நேரடியாக பேசும் படமா இருந்தா, அது விஜயின் கடைசி படத்துக்கு சரியான நிறைவா இருக்கும் என்பதே பலருடைய கருத்து.
ஒரு பக்கம் அரசியல் பயணம் தொடங்க தயாராகும் விஜய், இன்னொரு பக்கம் சினிமாவை விட்டு விலகும் முன் ஒரு வலுவான மெசேஜை சொல்லப் போறாரா? என்ற எதிர்பார்ப்புதான் இப்போ 'ஜனநாயகன்' படத்தை இன்னும் சுவாரசியமாக்கி இருக்கு. பொங்கல் ரிலீஸ் நெருங்க நெருங்க, இந்த படம் பற்றிய பேச்சு இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications