நிறை மாதத்தில் குத்தாட்டம் போட்ட ஜெனிஃபர்..பார்க்கும் கர்ப்பிணிகளின் பயம் குறைகிறதா?அதிகரிக்கிறதா?
சென்னை: தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகைகளின் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
சாதாரணமான நடிகையே அப்படி செய்யும்போது நான் டான்சர் அதனால் குத்தாட்டம் போடுகிறேன் என்று
ஜெனிபர் போட்ட ஆட்டம் அனைவரையும் அதிர வைத்திருக்கிறது.
நிறை மாதத்தில் இவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து பலர் கர்ப்பகாலம் அவ்வளவு பெரிய பயம் இல்லையா?? என்று கேட்டு வருகின்றனர்.

ட்ரெண்டாகும் கலாச்சாரம்
கர்ப்ப காலங்களில் கவனமாய் இருக்கவேண்டும்... என்கின்ற நிலைமாறி... கர்ப்ப காலங்களை கலகலப்பாய் கடந்து போகின்ற சூழ்நிலையே தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது. குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது அந்த அழகிய நினைவுகளையும், தோற்றங்களையும், நினைவில் வைத்துக் கொள்வதற்காக போட்டோ ஷூட் எடுப்பதென்பது தற்பொழுது ஃபேஷன் ஆகிவிட்டது. சாதாரண பெண் என்றால் போட்டோஷூட்டோடு நிறுத்தி இருப்பார். ஜெனிபர் தான் நடன கலைஞர் ஆயிற்றே!!! சும்மா விடுவாரா!? வளைகாப்பு நிகழ்ச்சியில் வளைந்து.. வளைந்து... இவர் போட்டுள்ள டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

நடனக்கலைஞர்
ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் குணசித்திர வேடம், மற்றும் நடன கலைஞராகவும் நடித்துள்ளார் ஜெனிஃபர்.இவரது தந்தை சின்னா ஒரு பிரபல நடன இயக்குனர் ஆவார். அதனாலேயே நடனம் என்பது இவர் ரத்தத்திலேயே ஊறி போன ஒன்றாக இருக்கிறது. ஸ்ரீகாந்த்- சினேகா நடிப்பில் வெளிவந்த 'பார்த்திபன் கனவு' திரைப்படத்தில் 'வாடி மச்சினியே' என்ற பாடலுக்கு இவர் ஆடிய குத்தாட்டத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு டான்ஸ் என்றால் ஒரு கை பார்த்து விடுவார்.

பாக்கியலட்சுமியின் பழைய ராதிகா
சின்னத்திரையில் சன் டிவி,ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ்,மற்றும் விஜய் டிவி என அனைத்து சேனல்களிலும் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் இவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.கலர்ஸ் தமிழ் சேனலில் இவர் நடிப்பில் ஒளிபரப்பப்பட்டு வரும் 'அம்மன்' சீரியல் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இருந்து ரீசன்ட்டாகத்தான் 'ராதிகா' கேரக்டரை கதையில் கொண்டு செல்லும் விதம் பிடிக்காமல் விலகினார்.

என்ன ஒரு டான்ஸ்
37 வயதான ஜெனிஃபர் க்கு சாந்தனு என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் இவர் தனது வளைகாப்பு நிகழ்ச்சியில் தன் கணவருடன் இணைந்து போட்டுள்ள டான்ஸ் வீடியோவை நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தி பார்த்து வருகின்றனர். செலிபிரிட்டி கள் இவ்வாறு வீடியோ போடுவது கர்ப்ப காலங்கள் குறித்து சில பெண்கள் மனதில் இருக்கும் பயத்தை போக்குவது மட்டுமின்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று சிலர் கூறினாலும்,இந்த வீடியோவை பார்த்து இதேபோல் வீடியோ போட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி ஏதேனும் கவனக்குறைவு ஏற்பட்டால்... அது ஆபத்தில் முடியும். என்று எச்சரிக்கையும் செய்து வருகின்றனர்.
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications