பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீண்டும் இவருக்கு பதில் இவரா?? புதுசா வருபவர் இவரா..!! கலங்கும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது கதாநாயகி விலகப் போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது.
முல்லை கேரக்டரில் நடிக்கும் காவியா இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்று பல மாதங்களாகவே செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
காவியா சீரியலை விட்டு விலகினால் அவருக்கு பதில் சரண்யா துரோடி தான் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் பரவி வருகிறது.

வி ஜே சித்ராவின் இழப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 4 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ஆரம்பித்த காலங்களில் இருந்து இப்ப வரைக்கும் பல நடிகர்கள் இன்று சீரியலை விட்டு விலகி இருக்கிறார்கள். ஒரு சில நடிகர்கள் மறைந்து போய் இருக்கிறார்கள். அவர்களுடைய இறப்பு இந்த சீரியல் ரசிகர்களுக்கு அதிக அளவில் வருத்தத்தை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ராவின் இறப்பு பலருக்கும் இப்ப வரைக்கும் அதிர்ச்சியாகவும், வருத்தத்தை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த முல்லை கேரக்டர்
பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகள் கடந்த நிலையில் அதன் வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாடி இருந்தது. முல்லையாக நடித்து வந்த காவியா விலகப் போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது. காவியா அறிவுமணி, ஏற்கனவே முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்த நிலையில் அவருடைய மறைவுக்கு பின்பு தான் இவர் முல்லையாக அறிமுகமானார். தற்போது இவரும் இந்த கேரக்டரில் இருந்து விலகப் போகிறார் என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம். ஏற்கனவே விஜே சித்ரா இறந்த பிறகு அவருடைய இடத்தில் வேறு யார் நடித்தாலும் நன்றாக இருக்காது என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் காவியா அந்த கேரக்டரில் நடித்த பிறகு இப்போது தான் முல்லையாக செட் ஆகியிருக்கிறார். அதற்குள் மீண்டும் வேறு ஒருவர் இந்த கேரக்டரின் நடித்தால் சீரியல
நன்றாகவே இருக்காது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

வெற்றி விழா
ஏற்கனவே ஐஸ்வர்யா கேரக்டரில் விஜே தீபிகா நடித்து வந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது வேறு ஒரு நடிகை நடிக்க வருகிறார். இந்த நிலையில் காவியாவின் வெளியேற்றும் சீரியலுக்கு பின்னடைவை தரும் என்று பல கூறி வருகிறார்கள். ஆனால் இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் தற்போது தான் ஆயிரம் ஆவது எபிசோடு வெற்றி விழா கொண்டாடிய சமயத்தில் அதில் முல்லையாக காவியா கலந்து கொண்டிருந்தார். அதனால் அவர் சீரியலை விட்டு விலகவில்லை என்று பலரும் அடித்து கூறி வருகிறார்கள்.

இவருக்கு பதில் அவரா
ஒருவேளை பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து காவியா விலகி விட்டால் அவருக்கு பதிலாக சரண்யா துரோடி தான் நடிக்க வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஏற்கனவே வி ஜே சித்ரா இறந்த நேரத்தில் சரண்யா துரோடி தான் அவருக்கு பதிலாக நடிக்க போகிறார் என்ற செய்திகள் பரவி வந்தது.அப்போது தன்னால் விஜே சித்ரா இடத்தில் நடிக்க முடியாது என்று சரண்யா கூறியிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் அவருடைய பெயர் அடிபடுகிறது. அது மட்டுமல்லாமல் சரண்யா துரோடி நடித்த ஒரு சில சீரியல்கள் சீக்கிரத்தில் முடிவடைந்து விட்டதால் இவர் இந்த சீரியலுக்கு வந்தால் சீரியல் முடித்து விடுவார்கள் என்று நக்கலாக சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications