"கட்டிங்" இனி வேணாம்னு அட்வைஸ் செய்த கமல்.. என் பொண்ணு வாயிலயே குத்துவா சார்னு சொன்ன ரோபோ சங்கர்
சென்னை: இனி கட்டிங் எல்லாம் வேண்டாம் என நடிகர் ரோபோ சங்கரிடம் உலக நாயகன் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் கண்டிப்பு தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அசத்த போவது யாரு, கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கியவர் ரோபோ சங்கர். இவர் விஜயகாந்த் போல் மிமிக்ரி செய்து புகழடைந்தார். மேலும் இவர் ஒரு டான்ஸரும் கூட! உடல் எடை இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவரும் சரி அவருடைய மனைவி மகளும் சரி நேர்த்தியாக நடனம் ஆடுவதில் வல்லவர்கள்.

உடல் எடை ஒரு தடையே இல்லை என்பதற்கு இவர்கள்தான் உதாரணமாக இருந்தனர். இந்த நிலையில் ரோபோ சங்கருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தனுஷின் மாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
இவர் ரீல்ஸ் செய்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அது போல் சில ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார். அந்த நிலையில் ரோபோ சங்கரின் உடல் எடை ஒரேடியாக குறைந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவரது உடல் நலனுக்கு என்ன ஆயிற்று என கேள்வி எழுப்பினர். அவரது உடல்நிலை குறித்து நிறைய வதந்திகள் வந்தன.
இதையடுத்து அவருக்கு மஞ்சள் காமாலை இருந்ததால் அதற்கு சிகிச்சை மேற்கொண்ட நிலையில் அவரது உடல் எடை குறைந்துவிட்டது என அவருடைய மனைவியும் மகளும் தெரிவித்திருந்தனர். அது போல் அவரும் ஒரு பேட்டியில் தனது உடல்நிலைக்கு என்ன ஆச்சு என்பதை விளக்கியுள்ளார். மது குடித்ததால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுத்தப்படுக்கையாகி பிறகு சிகிச்சைகளின் மூலம் உடல்நலம் தேறினேன்.
குடிக்காமல் இருப்பது பைத்தியம் பிடிப்பது போன்று இருந்தது. இரவு நேரங்களில் குடிக்காமல் தூக்கமே வராது, தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றும். மஞ்சள் காமாலையை கவனிக்காமல் விட்டதால் அது ரத்தத்தில் கலந்து விட்டது என்றும் ரோபோ சங்கர் விளக்கமளித்திருந்தார். மேலும் தான் மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
சில நிகழ்ச்சிகளிலும் படப்பிடிப்பிலும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் ரோபோ சங்கர் ஒரு கல்லூரி விழாவில் கூட தனக்கு மஞ்சள் காமாலை வந்ததற்கு குடிப்பழக்கம் தான் காரணம் என தெரிவித்திருந்தார். மேலும் இளைஞர்கள் யாரும் என்னை போல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் தனது தந்தையை போல் குடிப்பழக்கத்திற்கு யாரும் அடிமையாகிவிட வேண்டாம என மகள் இந்திரஜாவும் உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ள ரோபோ மீண்டும் சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவ்வாக இருந்து வருகிறார். அவருக்கு கமல்ஹாசன் போன் போட்டு நலம் விசாரித்துள்ளார்.
கமல்ஹாசன் பேசுகையில் உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், இனி கட்டிங் எல்லாம் வேண்டாம் என கமல்ஹாசன் கூறினார். அதற்கு ரோபோ இனிமேல் அதெல்லாம் கிடையாது சார். அப்படியே இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களையும் கூட்டிட்டுதான் போகணும் போல என தெரிவித்தார். மேலும் மனைவி பிரியங்கா தன்னை நன்றாக கவனித்து வருவதாகவும் வேளா வேளைக்கு சாப்பாடையும் மருந்தையும் கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.
தனது மகளின் அடுத்த ஆறு மாதத்தில் திருமணம் நடைபெறுவதாகவும் தேதி முடிவு செய்தவுடன் உங்களுக்கு சொல்கிறேன், வந்திருந்து மகளையும் மருமகனையும் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார், அது போல் ரோபோ சங்கரின் மனைவியிடமும் கமல் பேசியுள்ளார். வருங்கால மாப்பிள்ளையிடமும் பேசிய நிலையில் ரோபோ, சார் என் மகளிடம் பேசிடுங்க.. இல்லாட்டி என் வாயிலயே குத்துவா என காமெடியாக கூற கமலும் இந்திரஜாவிடம் பேசினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications