கண்கலங்கி கதறி அழுத சஞ்சீவ்... உணர்ச்சிவசப்படும் ரசிகர்கள்
சென்னை: போல்டான கேரக்டரில் இருக்கும் சஞ்சீவ் தற்போது கதறி அழுததை பார்த்து ரசிகர்கள் உருகிப் போய் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் சஞ்சீவ் செயலால் ராஜுவை பாராட்டும் ரசிகர்கள் அதிகரிக்கின்றனர்.
பிக்பாஸில் புது கூட்டணி தொடங்கப் போகிறது என ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர்.

அண்ணாச்சி இடத்தில் சஞ்சீவ்
பிக்பாஸ் ஐந்தாவது சீஸனில் ஒரு போட்டியாளராக வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அறிமுகமாகி இருக்கும் சஞ்சீவ் இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்துள்ளார். அதை பார்த்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், தற்போது அதே சஞ்சீவ் அண்ணாச்சியின் இடத்தில் மாறியுள்ளதை பார்த்து பலர் கலாய்க்கவும் தவறவில்லை. முதல் நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் அண்ணாச்சியின் பெட்டில் நான் இருந்து கொள்கிறேன் என்று பெருந்தன்மையாக கூறிய சஞ்சீவ், தற்போது அண்ணாச்சியை போன்று அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
பிக்பாஸ் வீட்டிற்குள் 50 நாட்களை கடந்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து இருக்கும் சஞ்சீவ் ஆரம்பத்திலிருந்து கலந்திருந்தால் இவர்தான் அடுத்த ஆரியாக இருந்திருப்பார் என்று ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். எப்போதும் தன்னுடைய நேர்மையான கருத்துக்களை சரியான இடத்தில் கூறிவிடுவது இவருடைய கேரக்டராக இருந்து வருவதால் இவரை ரசிகர்கள் நன்றாக ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டால் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் குறைந்துவிடும் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.

நேர்மையான விளையாட்டு
சஞ்சீவ் சின்னத்திரை வெள்ளித்திரை என சினிமாக்களில் மூலமாக ரசிகர்களுக்கு நன்றாக பரிச்சயமானவர் தான். அதனால்தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்று சொன்னதும் அவருடைய ரசிகர்களுக்கு மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இவரும் நன்றாக பூர்த்தி செய்து வருகிறார். இவருடைய விளையாட்டு நேர்மையாக இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் இவர் தாமரையை குறை கூறி வருகிறார் என்றும் பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

காரணம் இதுதானா
இந்த வார எலிமினேஷனில் ஒரு போட்டியாளராக இருக்கும் சஞ்சீவ் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளார். அதுவும் அவருடைய மகளின் ஆசைக்காக அவர் வீட்டிற்குள்ளே வந்து வீட்டை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். அதை தற்போது ராஜு இவருக்காகவே விளையாடி இவரை ஜெயிக்க வைத்து விட்டதால் கண்கலங்கி கட்டிபிடித்துள்ளார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அண்ணாச்சியின் இடத்தில் இனி சஞ்சீவ், ராஜூவுக்கு இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்களின் கூட்டணியால் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூடுகிறது என்றும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications