Kalyana Veedu Serial: மினி கோடம்பாக்கமாக மாறிப்போன காரைக்குடி!
காரைக்குடி: காரைக்குடி இயக்குநர் திருமுருகன் புண்ணியத்தால் மினி கோடம்பாக்கமாக மாறி உள்ளது.
திருமுருகனின் சொந்த ஊர் காரைக்குடி. இவர் முதல் சீரியலான மெட்டி ஒலியை சென்னையில் ஷூட்டிங் செய்த போது பேச்சிலர்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் சென்னையில் வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருந்தார்.

கல்யாணம் குடும்பம்
கல்யாணம் குடும்பம என்று ஆன நிலையில், இவருக்கு பொறுப்பு கூடித்தான் போனது. அதோடு, இவரது குடும்பத்தினரின் உதவியும் இவருக்கு தேவைப்பட்டதால், அவர்களை குடும்பத்தை விட்டு பிரித்து அழைத்துச் செல்லவும் முடியாத நிலை.

காரைக்குடியில் ஷூட்டிங்
ஐடியா செய்து ஷூட்டிங் ஸ்பாட் காரைக்குடியில் என்று மாற்றி அமைத்து நாதஸ்வரம் கதையை அமைத்தார். அதே போல ஒலிப்பதிவு தியேட்டரையும் காரைக்குடியில் உருவாக்கினார். இப்போது சென்னையில் வெறும் மார்க்கெட்டிங் அலுவலகம் மட்டுமே இயங்கி வருகிறது.

கல்யாண வீடு
நாதஸ்வரம் சீரியல் முதல், இப்போது ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியல் வரை ஒலிப்பதிவு முதலிட்ட அனைத்து பணிகளும் காரைக்குடி ஒலிப்பதிவு தியேட்டரில்தான் நடைப்பெற்று வருகிறது.எடிட்டிங், டப்பிங் என்று எதற்கும் வெளியில் போக வேண்டிய அவசியம் இல்லை.

இவரின் தியேட்டர்
திருமுருகனின் இந்த ஒலிப்பதிவு தியேட்டர் மற்ற சானல்களுக்கு சீரியல்கள் எடுப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் மற்ற சீரியல்களுக்கும் இந்த தியேட்டரைத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சீரியல்களுக்கு லொக்க்ஷன்ஸ்
இப்போது எடுக்கப்பட்டு வரும் சீரியல்களுக்கு வித்தியாசமான லொக்க்ஷன்ஸ் தேவைப்படுகிறது. அப்படிப் பார்க்கையில் திருமுருகன் உருவாக்கி வைத்து இருக்கும் தியேட்டரை போன்ற இப்படிப்பட்ட வசதிகள் அத்தியாவசியமானதாகும்... அவசியமானதுமாகும்.

திருமுருகன் வசதிக்கு
திருமுருகன் தனக்கு வசதிக்கு என்று செய்து வைத்தாலும், பிற்காலத்தில் இது போன்ற வருவாய்களும் ஈட்ட முடியும் என்கிற இவரின் கணக்கு தப்பாகவில்லை. சின்னத் திரையில் எப்படி எல்லாம் வருவாய் ஈட்ட முடியும் என்பதை வெகு அசால்ட்டாக கணித்து இன்றைக்கு அனைத்து வருவாய் மூலமும் கோடீஸ்வர லிஸ்டில் இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications