கார்த்திக் ராஜ் வீட்டு முன்பு ரசிகைகள் செய்த செயல்..என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க??
சென்னை: கார்த்திக் என்ற பெயரை வைத்து இருந்தால் இப்படியா??என்று சொல்லுமளவிற்கு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
Recommended Video
செம்பருத்தி சீரியலில் ஆதியாக நடித்துக்கொண்டிருந்த கார்த்திக்கின் ரசிகைகள் செய்த செயல் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

சின்னத்திரையில் கதாநாயகன்
சின்னத்திரையிலும் ஒருசில நடிகர்கள்தான் வெள்ளித்திரை நடிகர்களை போன்று வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் ஒருவராக இருக்கும் கார்த்திக் ராஜ் கனா காணும் காலங்கள், ஆபீஸ், செம்பருத்தி போன்ற ஹிட் சீரியல்களில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்து விட்டார். அதுவும் பெண் ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் தனக்கு ரசிகர்களாக மாற்றியிருக்கிறார். இவருடைய க்யூட்டான நடிப்பு பல பெண்களுக்கும் ஃபேவரைட் என்று கூறிவருகின்றனர். இவர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிய பிறகு பலபேர் அந்த சீரியல் பார்ப்பதை விட்டு விட்டார்களாம்.

வெள்ளித்திரையில் காலடி வைத்தல்
சின்னத்திரையில் அதிகமாக ரசிகர்களை கவர்ந்த ஒரு நடிகராக இருக்கும் கார்த்திக் ராஜ் தற்போது வெள்ளித் தரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இவருடைய வளர்ச்சி பிடிக்காத ஒரு சிலர் இவர் தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் நடிக்க விடாமல் செய்து கொண்டிருப்பதாக இவர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்து அவருடைய தீவிரமான ரசிகர்கள் பலர் கொந்தளித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் தான் தனியாகவே இனி திரைப்படத்தை எடுக்கப் போவதாகவும், அதற்கு ரசிகர்கள் உதவவேண்டும் என்றும் கூறியிருந்தார். இவருடைய நம்பிக்கையை இவருடைய ரசிகர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

உதவி செய்த ரசிகர்கள்
கார்த்திக் மீது வைத்திருக்கும் பாசத்தின் காரணமாக பல ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அவருடைய கே ஸ்டுடியோவிருக்கு அனுப்பி வருகின்றனர். தனக்கு பிடித்த ஹீரோவின் வளர்ச்சிக்காக தங்களால் முடிந்த உதவிகளையும் ரசிகர்கள் பலர் செய்து வருகின்றனர். இவருடைய திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கும் நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் போட்டோஸ்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்க்களை சமூக வலைத்தளத்தில் வைத்துள்ளனர்.

ரசிகைகளின் செயல்
தற்போது கார்த்திக் ராஜின் ரசிகர்களின் ஃபேன்ஸ் பேஜ்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இரண்டு பெண்கள் ஒரு வீட்டின் முன்பு நின்று கார்த்திக் கார்த்திக் என்று கத்திக் கொண்டிருக்கின்றனர். அப்படியே அழைத்துக் கொண்டு இருப்பது கார்த்திக் ராஜாவை தான் என்று அவருடைய ரசிகர்கள் மீம்ஸ் களில் போட்டு கொண்டாடி வருகின்றனர். ஒரு சில நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்ததும் வழக்கம்போல கலாய்த்து வருகின்றனர். சும்மாவே கார்த்திக்கு சீரியல்களில் எந்த எக்ஸ்பிரஸனையும் காட்டத் தெரியாது. நீங்கள் இப்படி கத்திக்கொண்டு இருந்தால் அவர் கண்டுகொள்ளவே மாட்டார் என்று சிலர் பொறாமையோடு கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications