Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் நினைவிடத்தில் மகனுக்காக உதவி கேட்ட அம்மா.. பாலா இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலா தனக்கு கிடைத்த விருதை மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து வழிபடுவதற்காக சென்ற இடத்தில் அவரிடம் தன்னுடைய மகனின் படிப்புக்காக ஒரு பெண் உதவி கேட்டு இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத செயலை பாலா செய்து இருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு பாலா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதோடு விஜய் டிவியில் இவர் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். இப்படியான நிலையில் இப்போது பல திரைப்படங்களிலும் பெரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

kpy Bala has given money to a woman who asked for help for her son s education at Vijayakanth Memorial

அதே நேரத்தில் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி செய்து வருகிறார். ஆனாலும் சமுதாயத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது. தான் உதவி செய்யவில்லை என்றாலும் அடுத்தவர்கள் செய்யும் உதவியை பலர் விமர்சித்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. கோடி கோடியாக வருமானம் பெறுபவர்கள் கூட அதிலிருந்து அடுத்தவர்களுக்கு செலவழிப்பதற்கு பலர் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பாலாவின் குடும்பத்தினர் இன்னும் பெரிய அளவில் முன்னேற்றம் அடையாமல் இருந்தாலும் அவர் பெரும் ஊதியத்தை பலருக்கும் உதவி செய்து வருகிறார். ஆனாலும் ஒரு சிலர் பாலா செய்யும் உதவிகள் குறித்து இது வேறு யாருடைய கருப்பு பணமாக இருக்கும் அதைத்தான் பாலா இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார் என்று விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால் அதைப் பற்றி கண்டுகொள்ளாத பாலா தொடர்ச்சியாக பலருக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இவர் இப்படி உதவி செய்வதாலேயே அவர் காதலித்த பெண் வீட்டில் இவருடைய திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் சமீபத்தில் "கேப்டன் புரட்சி கலைஞர் விருது" பாலாவிற்கு கிடைத்தது.

அந்த விருதை எடுத்து கொண்டு விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று பாலா ஆசி வாங்கினார். அப்போது அங்கு தன்னுடைய மகனோடு வந்த ஒரு மாணவனின் தாய் தன்னுடைய மகனுக்கு பதினொன்றாம் வகுப்பு படிப்பதற்கு தன்னால் பீஸ் கட்ட முடியவில்லை என்று உதவி கேட்க, உடனே தன்னிடம் இருந்து அனைத்து பணத்தையும் எடுத்துக் கொடுத்தார்.

இதைக்கண்டு அந்த தாய் கண்ணீர் மல்க பாலாவிற்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே பாலா செய்யும் உதவிகளை பார்த்து பலரும் இவரை குட்டி ராகவா லாரன்ஸ் என்று அழைத்து வருகின்றனர். அதே நேரத்தில் இப்போது பாலாவும் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து "மாற்றம்" என்ற சேவையை செய்து வருகிறார். ஆனாலும் தான் வெளியே போகும் இடத்தில் கூட தன்னிடம் உதவி கேட்கும் நபர்களுக்கு பாலா உதவி செய்வது குறித்து பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+