நேற்று அப்படி ஒரு பதிவை போட்ட லட்சுமி ராமகிருஷ்ணனா இப்படி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
சென்னை:ஓணம் பண்டிகை வாழ்த்துக்களோடு ஆறு மாத காலமாக தனக்குள் இருந்த சோகத்தை பற்றியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது தன்னுடைய வீட்டில் ஓணம் பண்டிகையொட்டி தானும் தனது மகளும் ஆடுவதை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.
அவரது நேற்றைய பதிவை பார்த்து அவருக்கு ஆறுதல் கூறி வந்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும், லட்சுமி ராமகிருஷ்ணனை மேடம் "யூ ஆர் கிரேட் "என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் மனநிலை மிகவும் திடமானது தான் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

வாழ்த்துக்களுடன் வந்த சோக செய்தி
ஓணம் பண்டிகை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனும் தன்னுடைய வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தார். ஆனால் அதனோடு சேர்ந்து அவர் பதிவிட்ட தகவல் அவரது பாலோயர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.தன்னுடைய மகளுக்கு கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லை என்றும், 20 மருத்துவர் கொண்ட குழு லட்சுமி ராமகிருஷ்ணன் மகளை கவனித்துக் கொண்டதாகவும் போஸ்ட் செய்திருந்தார்.அவரைத் தொடர்ந்து பாலோ செய்து வருபவர்களுக்கு இந்தத் தகவல் அதிர்ச்சியை விட பெரும் வியப்பை தந்திருந்தது.

நடிகை மற்றும் இயக்குனராக
நடிகையாக அவரது அறிமுகம் மலையாளத்தில் இருந்தாலும் தமிழில் நாவல் ,பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து எல்லாம் அவன் செயல், பாஸ் என்ற பாஸ்கரன், விண்ணைத்தாண்டி வருவாயா, நான் மகானல்ல, உட்பட 30 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் .இயக்குனர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காகவே மொட்டை அடித்துக்கொண்டு நடித்திருந்தார்.தன்னுடைய கதாபாத்திரத்திற்காக அவர் செய்த இந்த செயல் அந்த நேரத்தில் பலரால் பாராட்டப்பட்டது. அவருக்கு பல விருதுகளையும் பெற்று தந்தது. தன்னுள் இருக்கும் இயக்குனர் திறமைக்கும் வேலை கொடுக்கும் பொருட்டு ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, வீட்டுஉரிமையாளர்,அம்மானி போண்ற நான்கு படங்களை இயக்கியுள்ளார்.

நோ ரீஆக்சன் நார்மல் ஒன்லி
ஆறு மாத காலமாக இவ்வளவு பெரிய சோகத்தை தன்னுள் வைத்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், எந்த இடத்திலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவே இல்லை.வழக்கம்போல் விருது நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது, சினிமா குறித்த அப்டேட்களை கொடுப்பது,சமூக பிரச்சனைகளை பற்றி விவாதிப்பது போன்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் ரெகுலர் ஆக்டிவிட்டிஸை எப்பொழுதும் செய்து வந்திருந்தது தான் இவரது பாலோயர்களுக்கு வியப்பை தந்திருந்தது. இவரை மெய்யாலுமே இரும்பு பெண்மணி தான் என்று புகழவும் செய்து இருந்தனர்.

டான்ஸ் வீடியோ
நேற்றைய ட்விட்டர் பதிவை பார்த்து சற்று கலங்கி இருந்த லட்சுமி ராமகிருஷ்ணனின் ரசிகர்கள் இன்று அவர் போஸ்ட் செய்துள்ள வீடியோவை பார்த்து கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓணம் பண்டிகையை ஒட்டி தங்கள் வீட்டில் நடந்தது இதுதான்..என்று லட்சுமி ராமகிருஷ்ணனும் அவரது மகளும் இணைந்து ஆடியுள்ள டான்ஸ் வீடியோவை அப்லோட் செய்துள்ளார்.வீடியோவை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் ரசிகர்கள் "இப்படித்தான்..இருக்கும் இந்த நிமிடத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து விட வேண்டும்" என்று வீடியோவில் சென்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சலனமில்லா லட்சமி ராமகிருஷ்ணன்
தனக்குள் இருக்கும் சோகத்தை பதிவிடுவதற்கு முன்பும் சரி,பதிவிட்ட பின்பும் சரி லட்சுமி ராமகிருஷ்ணனின் நடவடிக்கைகளும் அவரது செயல்பாடுகளும் எந்தவித மாறுதல் இன்றி இருப்பதாகவும், இவ்வாறு இருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை... என்றும்,ஊர் பஞ்சாயத்து செய்வதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தகுதியானவர் தான் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications