குழந்தைகள் பிறந்து 100 நாள்.. மனைவி, மகள்களுக்கு சினேகன் கொடுத்த ஸ்பெஷல் பரிசு.. குவியும் வாழ்த்து
சென்னை: கவிஞர் சினேகன் தன்னுடைய காதல், கவிதை என்ற இரட்டை குழந்தைகள் பிறந்து நூறாவது நாளை குடும்பத்தோடு எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அதோடு தன்னுடைய குழந்தைகளின் நூறாவது நாள் பங்க்ஷனில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அழகான பரிசு கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை சினேகனின் மனைவி கன்னிகா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
சினிமாவில் என்னதான் திறமையும் அதற்கான உழைப்பும் இருந்தாலும் ஒரு சிலருடைய திறமை வெளியே தெரியாமலேயே இருக்கிறது. அதில் ஒருவர் தான் சினேகன். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். அதிலும் பல ஹிட் பாடல்கள் கூட இவர் எழுதிய பாடல்களாக தான் இருக்கும். இவர்தான் அந்த பாடலுக்கு ஆசிரியர் என்றே தெரியாமலேயே அந்தப் பாடல்களை பலர் மனதில் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிறந்த கலைஞர்
ஆனாலும் தனக்கான சரியான அங்கீகாரத்திற்காக சினேகன் போராடிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தான் கவிஞர் மட்டுமல்ல ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து கொண்டிருக்கிறார். ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் சினேகன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினேகன் குழந்தைகள்
இந்த நிலையில் சீரியல் மற்றும் சினிமா நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் கழித்து இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. குழந்தைகள் இருவருக்கும் சினேகனின் குருவான கமல்ஹாசன் தான் பெயர் வைத்திருந்தார். அதுவும் "காதல், கவிதை" என்று அழகான தமிழ் பெயரை வைத்திருந்தார். இது அந்த நேரத்தில் பலரையும் வியக்க வைத்தது.
சினேகன் எழுதிய பாடல்கள்
சினேகனின் இரண்டு குழந்தைகளுக்கும் தங்க வளையல் அணிவித்து கமல்ஹாசன் ஆசிர்வதித்து இருந்தார். அந்த புகைப்படங்களை கன்னிகா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். சினேகன் பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட பிறகுதான் பலருக்கும் பிரபலமானார். இந்த பாடல்கள் எல்லாம் சினேகன் எழுதியதா? என்று கூட அவருடைய பாடல்கள் பலருக்கும் தெரிய தொடங்கியது.
சினேகன் மனைவி
சினேகனின் மனைவி கன்னிகா நடிகை மட்டுமல்லாமல் தன்னுடைய நீண்ட முடி ரகசியத்துக்கு காரணமான ஹேர் ஆயிலை தயாரித்து பிசினஸ் வுமன் ஆகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுபோல சிலம்பாட்டம், புத்தகம் எழுதுதல், சமையல் கலை, ஓவியம் என்று பல திறமைகளை கையில் வைத்திருக்கிறார். சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

குழந்தைகளின் நூறாவது நாள்
தன்னுடைய குழந்தைகளோடு செய்யும் சின்னச்சின்ன செயல்களையும் கூட வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று கன்னிகா மற்றும் சினேகன் தம்பதியின் குழந்தைகளின் 100வது நாள். அதனால் அந்த நாளை மனைவி மட்டும் குடும்பத்துடன் சினேகன் எளிமையாக கொண்டாடி இருக்கிறார். தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் மனைவிக்கும் சேர்த்து கொலுசு பரிசு வழங்கி இருக்கிறார்.
குவியும் வாழ்த்துக்கள்
இவர்களை போலத்தான் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் தன்னுடைய மகனின் நூறாவது நாளை கொண்டாடி இருந்தார். அவர் குடும்பத்தோடு ஹோட்டலில் அதை பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தார். ஆனால் சினேகன் கன்னிகா தம்பதி தங்களுடைய குழந்தைகள் பங்க்ஷனை வீட்டில் எளிமையாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி குழந்தைகளை ஆசீர்வதித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications