Snehan: ட்ரீட்மெண்ட்டில் சினேகன்! விரைவில் மீளவேண்டும்! கன்னிகா உருக்கம்! குழந்தைகளின் முகத்தை பாருங்க!
சென்னை: தமிழ் திரை உலகில் பாடல் ஆசிரியர், கவிஞர், நடிகர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் என பல தளங்களில் முத்திரை பதித்தவர் சினேகன். இவர் சமீபத்தில் உடல்நிலை குறைவு காரணமாக ட்ரீட்மெண்ட் எடுத்து வருகிறார். சினேகனின் தந்தை சிவசங்கு சில வாரங்களுக்கு முன்புதான் காலமானார். அவருடைய புகைப்படத்தை கமல்ஹாசன் திறந்து வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து சினேகன் உடல்நிலை குறைவாக இருக்கும் தகவலை கன்னிகா வருத்தத்தோடு பகிர்ந்து இருக்கிறார்.
கன்னிகா வெளியிட்ட பதிவில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது அனைவரும் கவனமாய் இருங்க என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த வீடியோவில் சினேகன், கன்னிகா தம்பதியின் இரட்டை குழந்தைகளும் சோர்வாக ஒரு படுக்கையில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த குழந்தையை ஒரு பெண் போலீஸ் ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இந்த குடும்பம் விரைவில் மீண்டும் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.

சினேகன் தன் கிராமத்தில் இருந்து எப்படியாவது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தவர். இவர் முதலில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். புத்தம் புது பூவே படம் மூலமாக பாடல் ஆசிரியராக அறிமுகமானார். அதற்கு பிறகு பல ஹிட்டான பாடல்களை சினேகன் கொடுத்திருக்கிறார். இந்த பாடல்கள் எல்லாம் சினேகன் கொடுத்ததா என்று பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அவர் சுமார் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார்.
அதுபோல நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலிலும் கதாநாயகனாக நடிப்பை தொடங்கி இருந்தார். அரசியல், நடிப்பு, சினிமா என்று ஒரு பக்கம் இருந்தாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் சின்னத்திரை வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பெயர் வாங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் அறிமுகமான சினேகன் அதிகமான நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்தார்.
அதற்குப் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் பல வருடங்களாக காதலித்து வந்த நடிகை கன்னிகாவை திருமணம் செய்து இருந்தார். கன்னிகாவும் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்டது கமல்ஹாசனுக்காக தான். கமல்ஹாசனுடைய கொள்கைகளும், பேச்சும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் நான் அவருடைய தீவிரமான ரசிகர் என்று பல இடங்களில் சினேகன் சொல்லி இருந்தார். சமீபத்தில் சினேகனின் தந்தை காலமான பிறகு அவருடைய புகைப்படத்தை திறந்து வைப்பதற்காக கமல்ஹாசன் சினேகனின் சொந்த கிராமத்திற்கே சென்றிருந்தார். அப்போது சினேகனை தான் தத்தெடுத்து கொண்டதாகவும் அவர் பேசினார். இது பலருடைய பாராட்டை பெற்றது. இந்த நிலையில் இப்போது சினேகன் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வருவதை பார்க்கும் போது பலருக்கும் வருத்தமாக இருப்பதாகவும், அவர் விரைவில் வந்து அவருடைய குழந்தைகளோடு கொஞ்சி விளையாட வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications