கோச்சிங் வந்த பெண்ணை காதலித்த மாதவன்.. திருமணத்தில் நடந்த டுவிஸ்ட்..! அழகான லவ் ஸ்டோரி
சென்னை: நடிகர் மாதவனை சாக்லேட் பாயாக பலருக்கும் தெரியும். திரைப்படத்தில் அவருடைய காதல் மற்றும் நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது. அதே நேரத்தில் அவருடைய நிஜ வாழ்க்கையிலும் "அலைபாயுதே" திரைப்படத்தை விட சுவாரசியமான காதல் திருமணம் தான் செய்திருக்கிறார். அந்த தகவல் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்ப வரைக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் மாதவனை மேடி, சாக்லேட் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். அவருக்கு அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் கிடைக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாயகனாக வலம் வந்த அலைபாயுதே திரைப்படத்திற்கு பிறகு என்னவளே, மின்னலே, பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் என்று பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதிலும் தான் கதாநாயகனாக மட்டுமல்லாமல் மற்றவர்கள் நாயகர்களாக நடித்த திரைப்படத்திலும் மாதவன் நடித்திருக்கிறார். ஆனால் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் தமிழ் படங்களில் என்ட்ரி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மாதவனின் காதல் ஸ்டோரி இப்போது இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
அதாவது மாதவன் வகுப்பு எடுத்த கோச்சிங் சென்டர் படிக்க வந்த பெண்ணை தான் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். தற்போதைய நடிகர்கள் திருமணமான ஒரு சில வருடங்களில் விவாகரத்து செய்து விடுகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டும் தங்களுடைய குடும்பத்தினருக்கு சரியான அங்கீகாரத்தை கொடுத்து அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் அதில் நடிகர் மாதவனும் ஒருவர்.

மாதவன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவருடைய மனைவி சரிதாவை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். 90களில் விமான பணி பெண்ணாக வேண்டும் என்ற கனவில் இருந்து சரிதா கோலாலம்பூரில் பொது பேச்சு பயலரகத்தில் கலந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்த மாதவன் மோட்டிவேஷன் பேச்சாளராக இருந்திருக்கிறார்.
அதனால் அவர் அந்த இன்ஸ்டிடியூட்டில் பொது வகுப்புகளை எடுத்து இருக்கிறார். அந்த வகுப்பிற்கு சரிதா வந்திருக்கிறார். இவரிடம் பயிற்சி பெற்ற பிறகு விமான பணி பெண்ணாகவும் தேர்வாகி இருக்கிறார். அதற்காக தனக்கு பயிற்சி அளித்தவர்களுக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார். அப்போது மாதவனும் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்த நேரத்தில் இருவரும் காதலிப்போம் திருமணம் செய்து கொள்வோம் என்றெல்லாம் நாங்கள் நினைக்கவில்லை என்று இந்த ஜோடி கூறி இருக்கிறார்கள். ஆனால் அந்த பார்ட்டிக்கு பிறகு தான் சரிதாவும் மாதவனும் பேச தொடங்கி இருந்தார்களாம். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கி அதற்கு பிறகு இவர்களுக்குள் காதல் உருவாகி திருமணமும் நடைபெற்றிருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு தான் மாதவன் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். திருமணம் முடிந்த சில மாதங்கள் கழித்து தான் அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த திரைப்படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது கூட தன்னுடைய மனைவி சூட்டிங் ஸ்பாட்டுக்கு அடிக்கடி கூட்டிக்கொண்டு வருவாராம்.

அங்கு இருப்பவர்களிடம் தன்னுடைய மனைவியை அறிமுகப்படுத்துவாராம். அது போல அலைபாயுதே திரைப்படத்திற்கு பிறகும் தான் சூட்டிங் போகும் இடங்களில் தன்னுடைய மனைவியை அடிக்கடி கூட்டிக்கொண்டு வருவாராம். இப்ப வரைக்கும் இவர்களுக்குள் அதே காதல் இருப்பதற்கு காரணம் இவர்கள் கணவன் மனைவி என்பதை தாண்டி நல்ல நண்பர்களாக இருப்பது தான் என்று மாதவனும் அவருடைய மனைவியும் சரிதாவும் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications