எதிர்நீச்சல் சீரியலை விட்டு விலகியது இதற்காக தானா? மணக்கோலத்தில் மதுமிதா.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த மதுமிதா எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாவது பாகத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது புதியதாக நடிக்கும் சீரியலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவை போலவே சீரியல்களிலும் பிற மொழி நடிகைகள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ் நடிகைகளுக்கு என்னதான் திறமையும், உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது.

அதே நேரத்தில் தமிழ் சீரியல் மற்றும் சினிமாவை நம்பி வரும் பிற மொழி நடிகைகளுக்கும் தமிழ் ரசிகர்கள் அமோகமான வரவேற்பு கொடுக்கிறார்கள். அந்த வகையில் தமிழில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்தான் மதுமிதா. எதிர்நீச்சல் சீரியலுக்கு முன்பு கன்னட சீரியல்களில் அதிகமாக மதுமிதா நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில்தான் இவருக்கு இயக்குனர் திருச்செல்வம் இயக்கி நடித்த எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலே இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. ஆனால் எதிர்பார்க்காத வகையில் எதிர்நீச்சல் சீரியலில் முடிவு திடீரென்று வந்துவிட்டது. 770 எபிசோடு உடன் அந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் இந்த சீரியல் நடிகர்கள் பீல் பண்ணி பல போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர்.

அதுபோல ரசிகர்களும் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் உருவாக்க வேண்டும் என்று இயக்குனர் திருசெல்வத்திடம் வேண்டுகோள் வைத்து வந்தனர். அதுபோல இயக்குனர் திருச்செல்வம் இரண்டாவது பாகத்திற்கான கதையை ரெடி செய்து கொண்டிருக்கும் போது இந்த சீரியலில் ஜனனியாக நடித்து வந்த நடிகை மதுமிதா தான் இரண்டாவது பாகத்தில் இருந்து விலகப் போகிறேன் என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனால் இரண்டாவது பாகத்தில் விஜே பார்வதி ஜனனியாக நடிக்க, சீரியலும் இப்போது கடந்த வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் மதுமிதா நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மதுமிதா இதற்கு முன்பு சன் டிவி சீரியலில் நடித்து இருந்த நிலையில் இப்போது விஜய் டிவி சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார் அந்த சீரியலுக்கு அய்யனார் துணை என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாகும் என்று ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவுக்குப் பிறகு இந்த சீரியல் ஒளிபரப்பாகுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் அரவிந்த் சேஜு நடிக்கிறார். இவர் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் கலை கேரக்டரில் நடித்தவர் தான்.
அதுபோல இந்த சீரியலில் 4 அண்ணன் தம்பி இருக்கும் வீட்டில் அண்ணனின் மனைவியாக வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கிறார். அந்த வீட்டில் இவருக்கு துணையாக எல்லோரும் இருக்க போகிறார்களா? வினையாக இருக்கப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்போடு ப்ரோமோ இருக்கிறது.
இந்த நிலையில் இந்த ப்ரோமோவில் மதுமிதாவின் புது சீரியலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியல் வாய்ப்புக்காக தான் மதுமிதா எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா? என்றும் கேள்விகள் எழும்புகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications