காவேரி பற்றிய உண்மை தெரிந்து பணத்தை தூக்கி எறிந்த நிவின்.. விஜய் முடிவு இதுவா? இதை எதிர்பார்க்கலையே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் மார்ச் 13 முதல் 15ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் விஜய் மற்றும் காவிரி ஒரு வருட அக்ரீமெண்ட் திருமண வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட நிவின் காவிரிக்காக விஜய் முன்பு பேக் நிறைய பணத்தைக் கொட்டி இதை எடுத்துக்கொண்டு காவிரியை என்னோடு அனுப்பிவிடு என்று பேரம் பேசுகிறார்.
ஏற்கனவே இந்த சீரியலில் பிரியமானவளே திரைப்படத்தை காப்பி அடித்தது போல ஒரு வருட அக்ரிமெண்ட் வாழ்க்கையை விஜய் மற்றும் காவிரி வாழ்ந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் விஜய் காவிரி திருமண நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடியும் அழகாகத்தான் இருக்கிறது இவர்கள் காதலித்து நிஜ கணவன் மனைவியாக மாறினால் நன்றாக இருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இந்த சீரியல் தொடங்கியதுமே நிவின் காவிரிக்கு அதிகமான ஃபேன்ஸ் பேஜ் ஓபன் செய்யப்பட்டது. அப்போது இவர்களுடைய காதலுக்காக தான் பலரும் சப்போர்ட் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போது விஜய் காவேரி ஜோடி பலருடைய மனதை கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் நிவினிடம் விஜய் நானும் காவிரியும் ஒரு வருட அக்ரீமெண்ட் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அந்த ஒரு வருடம் முடிந்ததும் அவளை நீயே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார். இப்படியான நிலையில் இப்போது வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிவின், குமரனிடம் நீங்க ஊர்ல இருந்து கிளம்பும்போது பசுபதியிடம் பணத்தை வாங்கிட்டு தானே வந்தீங்க? என்று கேட்க அதற்கு குமரன் ஆமா பணத்த வாங்கிட்டு தான் வந்தோம். ஆனால் பணம் வாங்கின மாதிரி காணாம போயிடுச்சு என்று சொல்கிறார்.

அப்போ ஆபரேஷனுக்கு பணத்துக்கு என்ன பண்ணிங்க என்று நிவின் கேள்வி கேட்க அதற்கு குமரன் அந்த கஷ்டம் முழுக்க காவேரி தலையில் விழுந்துடுச்சு என்று சொல்ல அதைக் கேட்டு நிவின் குழப்பம் அடைந்து கோபத்தில் கத்துகிறார். அதற்குப் பிறகு ஏற்கனவே விஜய் நாங்கள் அக்ரீமெண்ட் திருமணம் செய்து இருக்கிறோம் என்று சொன்னதை நினைத்து பார்த்து ஒரு பேக் நிறைய பணத்தை கொண்டு வந்து,
இந்த பேக் நிறைய பணம் தான் இருக்கு. இதை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மரியாதையா காவேரிய அனுப்பி வைங்க என்று கேட்க அதற்கு கோபமாக விஜய் முறைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் இந்த ப்ரோமோவில் இனி விஜய்யின் பதில் என்ன என்று முடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

விஜய் எப்படியும் இதற்கு எனக்கு சம்மதம் இல்லை என்று தான் சொல்லப் போகிறார். அதே நேரத்தில் காவிரியோடு வாழ வேண்டும் என்று விருப்பம் கிடையாது. ஆனால் இன்னும் பத்து மாதம் இருக்கிறது அதுவரைக்கும் காவிரி எங்க வீட்டில் தான் இருந்தாக வேண்டும் என்று தான் சொல்லி அனுப்புவார் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. காரணம் விஜய் காவேரி மீது பாசம் இருந்தாலும் அதை எந்த இடத்திலும் காட்டாமல் திமிராக நடந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல காவேரிக்கு விஜய் மீது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பாசம் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் விஜய் இன்னொரு பெண்ணோடு இருக்கும் புகைப்படம் பார்த்த காவேரி அது யாரு என்று விசாரிக்க தொடங்கி இருக்கிறார். அந்தப் பெண் விஜய்யின் முன்னாள் காதலி தான் என்பது தெரிகிறது. ஆனால் அவர் யார் என்று தான் தெரியவில்லை.
அதே நேரத்தில் அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் முகத்தை பார்க்கும் போது நடிகை அனிதா சம்பத் போலவும் தெரிகிறது. அதுபோல தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நக்ஷத்ரா போலவும் இருக்கிறது. இதனால் விஜய்யின் காதலியாக இனி யார் வரப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. எப்படியோ இந்த வாரத்தில் விஜய் காவிரிக்காக என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று ஒரு பெரிய எதிர்பார்ப்பும், அதுபோல விஜய்யின் ஃபிளாஷ்பேக் கதையும் இனி அடுத்தடுத்து வர இருக்கிறது.
-
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications