‘முத்த மழை’ பாடல் எதனால் தக் லைஃப் படத்தில் வைக்கவில்லை! ரசிகர்களின் ஆதங்கத்துக்கு மணிரத்தினம் விளக்கம்
சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய தக் லைஃப் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி இரண்டு நாட்கள் தான் ஆகிறது. ஆனால் இந்த படம் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடல் பெரிய அளவில் ட்ரெண்டானது. அந்த பாடல் தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. இது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், எதற்காக அந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்று மணிரத்தினம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சில படங்கள் வெளியாவதற்கு முன்பே அந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்து விடும். அந்த திரைப்படம் பிளாப் ஆனால் கூட அந்த பாடல் வைத்து தான் இப்படி ஒரு படம் வந்தது என்றே பலர் நினைவு வைத்துக் கொள்ளும் வகையில் பாடல்கள் பல வருடங்களாக பலருடைய மனதை ஆக்கிரமிக்கும். அதிலும் தற்போது சோசியல் மீடியா பயன்பாடு காரணமாக சில படங்கள் வெளியாகும் முன்பே இசை வெளியீட்டு விழாவில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்களும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.

தக் லைஃப் இசை வெளியீட்டு விழா
அதேபோலத்தான் தக் லைஃப் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடப்பட்ட முத்து மழை பாடல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த திரைப்படத்தில் முத்த மழை பாடலை பாடகி தீ தான் பாடியிருந்தார். ஆனால் இசை வெளியீட்டு விழாவிற்க்கு வர முடியாத சூழ்நிலை இருந்ததால் அந்த பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார்.
முத்தமழை பாடல்
இருவருடைய பாடல் வெர்ஷனும் வேறு விதமாக இருந்தாலும் இரண்டுமே மக்கள் மனதில் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த பாடல் பார்த்ததற்காக ஆர்வத்தோடு தியேட்டருக்கு போன ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. காரணம் முத்தமழை பாடல் இடம்பெறவில்லை. திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம் பெறுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

மணிரத்தினம் விளக்கம்
இதனால் முத்த மழை பாடல் எந்த சூழ்நிலையில் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்த நிலையில், இந்த பாடல் இடம்பெறாததால் பலரும் இதுகுறித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இது பற்றி இயக்குனர் மணிரத்தினம் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதில் அவர் பேசும் போது, "முன்னாடி மாதிரி இப்போ இல்லை. தற்போது பாடல்களை கேட்பதற்கு யூடியூப் போன்ற தளங்கள் வந்துவிட்டது. அது மட்டும் அல்லாமல் இப்போது பலர் தியேட்டருக்கு பாடல் கேட்க வருவதில்லை, படத்தின் கதையை மாத்திரமே பார்க்கின்றனர். அதைவிட எல்லா பாடல்களும் படத்தில் இடம்பெற வேண்டும் என அவசியம் இல்லை. அது சில சமயங்களில் கதைக்கு பொருந்தாமல் இருக்கலாம். சில சமயங்களில் பேக்ரவுண்ட் மியூசிக்கில் கூட வந்து இருக்கலாம்" என்று மணிரத்தினம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications