மீண்டும் குக் வித் கோமாளி வந்த மணிமேகலை.. ஆனால் இப்ப கோமாளி இல்ல.. இப்படி ஒரு மாற்றமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கான இந்த வார பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் மீண்டும் மணிமேகலை கலந்து கொண்டிருக்கிறார். இது ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆனால் இந்த முறை மணிமேகலை கோமாளியாக இல்லாமல் தொகுப்பாளராக கெத்தாக களம் இறங்கி இருக்கிறார்.

தொகுப்பாளர் மணிமேகலை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான் கிடைத்திருக்கிறது. அது வேறொன்றும் இல்லை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் இனி கலந்து கொள்ளவில்லை என்று கூறி இருந்த மணிமேகலை மீண்டும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் எபிசோடில் கலந்து கொண்டிருக்கிறார்.
மணிமேகலை சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட மணிமேகலை தொடர்ந்து நான்கு சீசன்களாக கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் தான் திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகப் போகிறேன் என்று பதிவு வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தார். எதற்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் விலகினார் என்ற காரணத்தை மணிமேகலை இப்ப வரைக்கும் கூறாமல் இருந்த நிலையில் அது பற்றி பல்வேறு வதந்திகளும் கிளம்பி வந்தது.

அதற்கு அதிகமான ரசிகர்கள் இதுவரைக்கும் கோமாளியாக இருந்த சிவாங்கி குக்காக மாறியதால் சிவாங்கி மற்றும் மணிமேகலைக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணம் என்று சிலர் கூறியுள்ளனர். இன்னும் ஒரு சிலர் மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறார் என்றும் வதந்தி பரப்பி வந்தனர். ஆனால் அது எல்லாமே பொய் என்பது சில நாட்களில் தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி அதில் மணிமேகலை கலந்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை கமெண்ட்களில் வெளிகாட்டி வருகின்றனர். ஆனால் இந்த முறை மணிமேகலை கோமாளியாக கலந்து கொள்ளவில்லை என்றும் ரக்ஷன் உடன் சேர்ந்து தொகுப்பாளராக கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தொடர்ந்து இனி மணிமேகலை வருகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications