நீயா நானா: இந்த பிரச்சனையை பெருசு பண்ணாதீங்க..வாதமிட்ட நபர்.. டாக்டர் கொடுத்த பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மனநல சிகிச்சைக்கு செல்வதை இயல்பாக ஏற்க முடியாது என்றும் மனநல சிகிச்சை இயல்பாக மாற வேண்டும் என்று விவாதம் நடக்கிறது.
அதில் மனநல மருத்துவர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
அதில் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறதால பல தற்கொலை நடக்கிறது என டாக்டர்கள் கூறி அதற்கான அறிவுரைகளும் கொடுத்து இருக்கின்றனர்.
சமுதாயத்தில் பரவலாக இருக்கும் பிரச்சனையின் அடிப்படையிலேயே விவாதம் நடத்தி வருவதாலே விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியை அதிகமான ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இந்த நீயா நானா நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதோடு இல்லாமல் நீயா நானா நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் பிரபலம் என்றால் அது கோபிநாத்தாக தான் இருக்க முடியும். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முதல் முதலில் இருந்து இப்ப வரைக்கும் தொகுப்பாளராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நியாயமான கருத்துக்களும் நடுநிலையான தீர்ப்பும், அதிகமான ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. தன்னுடைய மனதில் பட்டதை டக் என்று பேசிவிடும் இவருடைய கேரக்டரை அதிகமானோர் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதுபோல நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலர் பிரபலமடைந்தவர்களும் இருக்கின்றனர். பல திரைப்படங்களில் நடித்தும் கிடைக்காத பிரபலங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் ஒரு சில எபிசோடுகளில் சிலருக்கு கிடைத்து விடுகிறது.. சில மாதங்களுக்கு முன்பு அப்பா மகள் பாசம் வெளிச்சத்துக்கு வந்தது. அதுபோல சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய அண்ணனும் அப்பாவும் பேசாமல் இருந்த நிலையில் அவர்களை பேச வைப்பதற்காக ஒரு தங்கை செய்த செயலும் பலருடைய பாராட்டை பெற்று இருந்தது.
இப்படியாக நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டே போகலாம். அந்த வகையில் இந்த வாரம் மனநிலை சிகிச்சைக்கு செல்வதை இயல்பாக ஏற்க முடியாது என்று சிலரும் மனநல சிகிச்சை இயல்பாக மாற வேண்டும் என்றும் சிலரும் கலந்து கொண்டு விவாதம் செய்கின்றனர்.
இந்த நிலையில் இந்த எபிசோட்கான இரண்டாவது பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு நபர் எதுக்கு டாக்டர்கிட்ட போகுற அளவுக்கு இந்த பிரச்சனையை பெருசாக்கணும்னு நான் கேட்கிறேன் என்று ஊதா கலர் சட்டை போட்ட நபர் சொல்ல, அதற்கு ஒரு மருத்துவர் மன அழுத்தம் வந்தால் மாத்திரை போட்டுட்டு தூங்குறவங்களும் இருக்காங்க, மன அழுத்தம் வந்து முத்தி போய் தற்கொலை பண்றவங்களும் இருக்காங்க என்று பயம் காட்டுகிறார்.
அதற்கு இன்னொரு கட்டம் போட்ட சட்டை அணிந்த நபர் மூணு வயசிலிருந்து 80 வயசு வரை உள்ள எல்லாருக்கும் மன அழுத்தம் இருக்கு என்று சொல்ல, அதற்கு இன்னொரு மனநல மருத்துவர் மெண்டல் ஹெல்த் வேறு, மெண்டல் ஹெல்த் டிசார்டர் வேறு என்று அறிவியல் பூர்வமாக விளக்கப் பார்க்க அதே நேரத்தில் இன்னொரு கட்டம் போட்ட சட்டை நபர் குறிப்பிட்டு பேசுகிறார்.
அவர் பேசுகையில் எனக்கே தெரியாது நான் என்ன ஸ்டேஜ்ல இருக்கேன்னு என்று வெகுளித்தனமாக சொல்ல அதற்கு மனநல மருத்துவரில் இன்னொரு பெண் டாக்டர் அதுக்கு தான் சார் நாங்க ஹாஸ்பிடலுக்கு போங்கன்னு சொல்றேன் என்று கூறுகிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த ப்ரோமோவிற்கு ரசிகர்கள் பல கலகலப்பான கமெண்ட்களை கொடுத்திருக்கின்றனர். அதில் ரசிகர் ஒருவர் 20 வருஷத்துக்கு முன்னாடி மன அழுத்தம்ங்கறது என்னன்னு தெரியாது. ஆனா இப்ப அது ஒரு வியாதியா மாறிட்டு என்று கூற, அதற்கு இன்னொரு ரசிகர் மன அழுத்தம் ரிலீஃப் ஆகணுங்கறதுக்காக தெரபிஸ்ட் கிட்ட போயி அவங்களுக்கு பீஸ் கட்டவே மன அழுத்தம் டபுள் ஆகிடும். இதுக்கு நல்லா சாப்பிட்டுட்டு, நல்லா படம் பார்த்துட்டு பேமிலி கூட ஹேப்பியா ராஜா ராணி விளையாடுங்க போதும் என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications