அந்த குழந்தை என்னயா பாவம் பண்ணுச்சு? விவாகரத்து செஞ்சா இவ்வளவு வேதனையா? கோபிநாத் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜனவரி 28-ம் தேதிக்கான எபிசோடில் விவாகரத்து செய்த பெண்களும், பொதுமக்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. பெண்கள் விவாகரத்து செய்ததை பொதுமக்கள் எந்த மாதிரி பார்க்கிறார்கள் என்ற கோணத்தில் நேற்று எபிசோடு விவாதம் நடைபெற்றது.

அதில் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டால் அதில் பிள்ளைகள்தான் கஷ்டப்படுகிறார்கள். அதுவும் விவாகரத்து செய்த பெண்கள் மீது தான் அதிகமான பழிகள் வந்து விழுகிறது. விவாகரத்து செய்த பெண்களோடு இருக்கும் குழந்தைகளை சமுதாயத்தில் பலரும் மதிப்பதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் நீயா நானா நிகழ்ச்சியில் வைக்கப்பட்டது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Neeya Naana 2024 January 28th episode Divorced Women and Society Gopinath is emotional

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி பற்றி பல மாதங்களுக்கு பிறகு இந்த வார எபிசோடு அதிகமாக ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இந்த வாரத்தில் விவாகரத்து ஆன பெண்களை சமூகத்தில் எப்படி பார்க்கிறார்கள் என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

அதில் விவாகரத்தான பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதில் சில ஆண்களும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களும் விவாகரத்து ஆனவர்கள் தான். அவர்கள் விவாகரத்து ஆனதால் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கஷ்டம் தான் என்று தங்களுடைய வேதனைகளை சொல்லிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு ஆண் தான் பெரிய கம்பெனியில் பெரிய பொறுப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Neeya Naana 2024 January 28th episode Divorced Women and Society Gopinath is emotional

என்னுடைய குழந்தை பிறந்து சில வருடங்களில் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் நான் 18 வருடங்களாக பொறுமையாக பல்லை கடித்துக் கொண்டு அந்த வாழ்க்கையில் இருந்தேன் எல்லாம் என்னுடைய குழந்தைகளுக்காக தான்.... ஏனென்றால் எனக்கு பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு 18 வயது ஆகட்டும் என்று பொறுமையாக இருந்தேன்.

அதற்குப் பிறகு தான் விவாகரத்து செய்தேன். ஆரம்பத்திலேயே என்னால் விவாகரத்து செய்ய முடியவில்லை. நான் அப்படி விவாகரத்து செய்திருந்தால் என்னுடைய குழந்தைகளை என்னிடம் காட்டாமல் தவிக்க விட்டு இருப்பார்கள் என்று சொல்லியிருந்தார். அதுபோல இன்னொரு பெண் நான் விவாகரத்து செய்து விட்டதால் என்னுடைய குழந்தைகளின் கேரக்டரை பலர் இவங்க அம்மா போலத்தான் இருக்கும் என்று தவறாக பேசுகிறார்கள்.

அதனாலே என்னுடைய பையன் என்மேல ரொம்ப கோபப்படுறான். அவன் அவங்க அப்பா கூட போய் இருக்கிறான். என் மேல தான் தப்பு என்கிற மாதிரியே எல்லோரும் பேசுறாங்க. எங்களுடைய குழந்தை வெளியில் தாங்கள் ரொம்பவே கஷ்டப்படுவதாக சொல்லி புலம்புறாங்க என்று வேதனையில் பேசிக் கொண்டிருந்தார்.

அதுபோல அதே நிகழ்ச்சியில் ஒரு ஆண் நாங்கள் விவாகரத்து ஆன பெண்களோடு எங்களுடைய குழந்தைகளை கூட பேச விடுவதில்லை. காரணம் எங்க பொண்ணு சின்னதா ஒரு பிரச்சனை என்று அந்த விவாகரத்தான பெண்களிடம் சொல்லும் போது அவர்கள் இப்ப பாரு நாங்க விவாகரத்து செய்துவிட்டு சந்தோஷமாக இருக்கிறோம்.

Neeya Naana 2024 January 28th episode Divorced Women and Society Gopinath is emotional

அதனால நீயும் அதே முடிவை எடு என்று என்னுடைய மகளையும் மனதை மாற்றி விடுவார்கள் என்று சொல்ல, அதற்கு விவாகரத்து ஆன பெண்களில் இருந்த ஒரு பெண் அவர் ஒரு டாக்டர் அவர் அந்த ஆணை கேள்வி மேல் கேள்வி கேட்டு கதற விட்டிருந்தார். அதாவது விவாகரத்து ஆன பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?

Neeya Naana 2024 January 28th episode Divorced Women and Society Gopinath is emotional

அதுபோல இந்த சமுதாயத்தில் விவாகரத்து ஆகாத பெண்களுக்கு இந்த சமுதாயம் என்ன செய்தது? அவர்களால் நிம்மதியாக இருக்க முடிகிறதா? என்று கேள்வி கேட்க அதற்கு அந்த ஆண் பதில் பேச முடியாமல் திணறி இருந்தார். அதற்கு கோபிநாத் நீங்கள் சமுதாயம் என்கிற போர்வையில் பெண்களை இன்னமும் அடிமையாக இருக்க வேண்டும். விவாகரத்து ஆகிவிட்டால் அவள் அழுது கொண்டே இருக்க வேண்டும். அவள் தைரியமாக மேலே எழுந்து வந்து விடக்கூடாது என்ற கருத்தில் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், என்று நறுக்கென்று கொட்டு வைத்தது போல அட்வைஸ் கொடுத்து இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+