சொந்தத்தை நம்பி விவாகரத்து செய்து பட்ட பாடு.. கண்ணீரோடு பெண்ணின் கதறல்.. கோபிநாத் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜனவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில் விவாகரத்து செய்தவர்களும் அவர்களை சமூகத்தினர் எப்படி பார்க்கிறார்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் மணமுறிவு செய்த பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த வேதனைகள் குறித்து பேசி இருந்தனர்.
அதுபோல எதிரணியில் இருந்த பொதுமக்கள் இவர்கள் விவாகரத்து செய்து கொள்வதை எங்களால் எதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது பற்றியும் விவாதித்து இருந்தனர். அப்போது ஒரு பெண் தான் விவாகரத்து செய்துவிட்டு பிறகு பட்ட வேதனை குறித்து பேசி இருந்தது பலரையும் கண்கலங்க வைத்திருந்தது. அதுவும் தன்னுடைய குடும்பத்தின் பேச்சைக் கேட்டு தான் அவசரப்பட்டு செய்ததால் பிறகு பட்ட வேதனை குறித்து அந்த பெண் பேசி இருப்பது பலருக்கும் செம பதிலடி கொடுத்திருக்கிறது.

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் வெற்றி பெற்ற ஹிட்டான நிகழ்ச்சிகளில் நீயா நானா நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சமுதாயத்தில் நடக்கும் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் விவாகரத்து செய்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் இடையே விவாதம் வைக்கப்பட்டது.
அதில் விவகாரத்து செய்த பிறகு நாம எடுத்த முடிவு தப்பா போயிட்டதே என்று நீங்கள் யோசித்து இருக்கீங்களா என்று கோபிநாத் கேட்ட கேள்விக்கு அங்கிருந்த சில பெண்கள் சொன்ன வார்த்தைதான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதில் ஒரு பெண் என்னுடைய கணவருக்கு ஆறு மாதங்கள் வேலை இல்லை. அந்த நேரத்தில் நான் அதை பெரியதாக எடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது என்னுடைய அண்ணன், தம்பிகளும், பெற்றோரும் நீ அவரை விட்டு வந்துவிடு அவரோடு உன்னால் கஷ்டப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இனி நாங்களே உனக்கு ஒரு வீடு தருகிறோம், நீ அதில் இருந்து கொள் நாங்கள் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வோம் என்று சொன்னார்கள். நானும் அப்போது எனக்குள் இருந்து ஈகோ காரணமாக அவரை விட்டுவிட்டு வந்து விட்டேன்.
அதற்குப் பிறகு கொஞ்ச நாளில் என்னுடைய அண்ணனுக்கும் தம்பிக்கும் கல்யாணம் முடிந்தது. அவர்களுடைய திருமணத்திற்கு பிறகு அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லவில்லை. ஆனால் நான் வெளியே போகிற மாதிரி அவர்கள் நடவடிக்கை இருந்தது. அதனால் நான் வெளியே வந்து விட்டேன்.

அதற்குப் பிறகு நான் இப்போது ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்க்கிறேன். இரவு வந்து பிளவுஸ் ஸ்டிச் பண்ணி கொடுக்கிறேன். குறைந்தது நான் ஆறு மணி நேரம் தான் வேலை பார்க்கிறேன். இப்போது இப்படி உழைக்கிறேன் ஆனால் அந்த நேரத்தில் நான் என்னுடைய திமிரை விட்டுவிட்டு அவரோடு அந்த நேரத்தில் கொஞ்சம் அட்ஜஸ்மெண்ட் செய்து போயிருந்தால் இப்போது எங்களுக்கு இரண்டு வருமானம் இருந்திருக்கும். நானும் நிம்மதியாக இருந்திருக்கலாம்.
பகலில் எல்லாம் ஓடி ஓடி வேலை செய்யும் போது எனக்கு பெரியதாக வருத்தம் தெரியவில்லை. ஆனால் ராத்திரி நேரத்தில் வீட்டில் இருக்கும்போது தான் அந்த அமைதி என்னை ஒவ்வொரு நாளும் கொல்கிறது. கணவரை விட்டு பிரிந்து வந்தது தப்பு என்று நான் பத்து வருடங்கள் கழித்து புரிந்து கொண்டேன். அவரோடு சேர வேண்டும் என்று முடிவு எடுத்துத்தேன். அப்போது அவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்து விட்டது.
அதற்கு பிறகு தான் நான் யோசித்தேன் ஒரு ஆறு மாத காலம் வேலை இல்லை என்பதற்காக அவரை பிரிஞ்சு இப்போ கடுமையா வேலை செஞ்சாலும் வாழ்க்கையே வெறுமையா இருக்கிறது. என்னுடைய வீட்டாரின் பேச்சைக் கேட்டு நான் தப்பு பண்ணி விட்டேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பலருக்கும் பாடமாகவும் இருக்கிறது.
சின்ன பிரச்சனைகளுக்கும் விவாகரத்து தான் தீர்வு என்று கணவனோ அல்லது மனைவியோ முடிவு எடுத்து தங்களுடைய குடும்பத்தார் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வதால் பிறகு பல வேதனைகளை அனுபவிக்க வேண்டியது இருக்கிறது. அதை சிலர் காலம் கடந்து புரிந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications