Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைகளை நாய் கடிக்கும் போது நீங்க எங்க போனீங்க? திமிரா பேசிய அம்மு! கடைசியில் அவர் கொடுத்த விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியை பற்றி தான் இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த வார நிகழ்ச்சியில் தெரு நாய்களை பராமரிப்பவர்கள் மற்றும் அதை தேவையில்லை என்று சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் தெருநாய்களை ஆதரிப்பவர்கள் அணியில் நடிகை அம்மு பேசியது பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதே போல அவர் youtube சேனல் ஒன்றில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிக்கும் போது பெற்றோர் எங்க போனீங்க என்று கேட்டதற்கு பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Neeya Naana Vijay TV Ammu

தெரு நாய் எபிசோட்

சமீபகாலமாக தெருநாய்க்கடியால் பலர் தொந்தரவுகளை அனுபவிக்கிறார்கள். பல குழந்தைகளும், பெரியவர்களும் இந்த நாய்கடியால் இறந்து போயிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தெருவில் நடப்பதற்கே பயப்பட வேண்டிய சூழ்நிலை தான் இருக்கிறது. இரவில் அவசரத்திற்கு ஒரு தெருவை விட்டு இன்னொரு தெருவிற்கு போக முடியாத சூழ்நிலை இருக்கும் நிலையில் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் இது பற்றிய விவாதம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீயா நானா விவாதம்

இந்த விவாதத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் தெரு நாய்கள் தேவையில்லாதது என்று வாதிட்டனர். அதற்கு எதிர்தரப்பில் சில பிரபலங்கள் தெரு நாய்களும் ஒரு உயிர் தானே அவர்களுக்கும் இந்த உலகத்தில் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது, அவர்களை எப்படி அப்புறப்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அப்போது நடிகை அம்மு நான் சிங்கிளாக இருக்கிறேன் நான் எங்க வீட்டின் நான்கு நாய்களை வளர்க்கிறேன். அந்த நான்கு நாய்களும் என்னுடைய குழந்தைகள்தான் என்று சொல்லி இருந்தார். அதற்கு அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

நடிகை அம்மு வீடியோ

இதற்கிடையில் அவர் ஒரு youtube சேனலில் பேசிய வீடியோவும் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் பேசும்போது "தெருவில் நாய் குழந்தைகளை கடித்து விட்டது என்று எல்லோரும் சொல்றீங்களே அந்த நாய் குழந்தையை கடித்து குதறும் போது பெற்றோர் எங்க போனீங்க? அந்த குழந்தை கத்தி கதறும் போது கூட பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் வரவில்லையே? நாங்க எங்க வீட்டில் வளர்க்கும் நான்கு கால் ஜீவன்களுக்கு, ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் சரி, அவங்களுடைய சத்தம் வித்தியாசமாக இருந்தால் கூட நாங்கள் ஓடிவந்து பார்க்கிறோம். ஆனால் நீங்க உங்க குழந்தைகளை எப்படி தனியாக விடுறீங்க என்று கேட்டிருக்கிறார். இதுதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது பலரும் அவரைத் திட்டிக் கொண்டிருக்கிறார்.

இது அநியாயம்

நாயை குழந்தையோடு ஒப்பிடுகிறார் என்பது பலருடைய ஆதங்கமாக இருக்கிறது. ஒரு தெருவில் அம்மாவும் பொண்ணும் நடந்து போகும்போது திடீரென கூட்டமாக வரும் நாய் அந்த குழந்தையை கவ்வி இழுத்து கடிக்கிறது. அப்போது அந்த தாயார் எத்தனை நாய்களை சமாளிக்க முடியும்? கடித்து குதறப்பட்ட குழந்தைக்கு இந்த நடிகை பரிதாபம் காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு பெற்றோரின் பரிதவிப்பை இவ்வளவு இளக்காரமாக பேசுகிறாரே என்று பலரும் அவரை திட்டி வருகிறார்கள்.

கோபப்பட்ட கோபிநாத்

ஏற்கனவே நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு நபர் தன்னுடைய பையனை ஸ்கூலுக்கு ஆட்டோவில் கூட்டி கொண்டு போகும்போது எதிரே வந்த நாயால் எதிர்பக்கத்தில் ஆட்டோவை திருப்ப ஆட்டோ சரிந்ததில் தன்னுடைய மகன் கண் முன்பே இறந்து போய்விட்டான் என்று அழுதபடி சொல்லி இருந்தார். அந்த தந்தையின் வேதனை காண்போரை கண் கலங்க வைத்தது. அப்போது எதிர்தரப்பில் இருந்த நாய்களின் ஆதரவாளரில் ஒரு பெண் எனக்கு இரண்டு முறை ஆக்சிடென்ட் ஆகி இருக்கிறது அப்போது ஒரு குழந்தை குறுக்கே வந்ததால் எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு என்று சொல்ல, அதற்கு கோபிநாத் கோபப்பட்டு இருந்தார். நாயும் குழந்தையும் ஒன்றா என்று அவர் கேள்வி கேட்டிருந்தார். ஆனால் இப்போது அம்மு பேசியது அதைவிட மோசமாக இருக்கிறது என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+