நீயா நானா: அப்பா முன்பு மகனிடம் கோபிநாத் கேட்ட கேள்வி.. பணத்துக்காக தான் பாசமா? சரியான குட்டு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் செப்டம்பர் 8ஆம் தேதிக்கான எபிசோடில் மகன் மீது இருக்கும் பாசத்தை வெளி காட்டாத தந்தைகள் vs தந்தையின் பாசத்தை புரிந்து கொள்ளாத மகன்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதில் கோபிநாத் தந்தையை புரிந்து கொள்ளாத மகன்களுக்கு சரியான பாடம் புகட்டி இருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சி மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து விவாதம் நடைபெற்று வந்தாலும் ஒரு சில விவாதங்கள் அதே தலைப்புகளில் பல மாதங்கள் கழித்து மீண்டும் வருகிறது. அதுபோலத்தான் இந்த வாரம் கூட மகன்கள் மீது தனக்கு இருக்கும் பாசத்தை வெளியே காட்டாத அப்பாமார்களும், அப்பாவின் அன்பை புரிந்து கொள்ளாத மகன்களும் இந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

பொதுவாக தந்தை மகன் உறவு என்பது பல வீடுகளில் ஏழாம் பொருத்தம் எட்டாம் பொருத்தம் என்று சொல்வது போல தான் இருக்கிறது. தந்தை தான் மகனின் வில்லன் போல மகன்கள் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தை இருக்கிற வரைக்கும் அவர்களுக்கு தந்தையின் அன்பு புரிவதில்லை. ஆனால் தந்தை இறந்து போன பிறகு தந்தையின் அருமையை பலர் புரிந்து கொள்கிறார்கள். இது பல வீடுகளில் பார்க்க முடிகிறது.
அதுபோல பல தந்தைகளும் தங்கள் மனதிற்குள் மகன்கள் மீது அளவுக்கதிகமான பாசம் இருந்தாலும் அதை முகத்துக்கு நேராக காட்டுவது கிடையாது. இது ஈகோ பிரச்சனையா? அல்லது நான் உன்னை விட இன்னும் வலிமை குறையவில்லை என்று தந்தைகள் பிகு பண்ணுகிறார்களா? என்று புரியாத புதிராகத்தான் இருக்கிறது. இதற்கு விடை சொல்லும் விதமாகத்தான் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நடைபெறுகிறது.
Exclusive: நீயா நானா சக்ஸஸுக்கு காரணம் இதுதான்! தலைப்பில் இத்தனை விஷயம் இருக்கு! இயக்குனர் பளிச்
தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி இருக்கிறது. அதில் பல தந்தைகள் தங்களுடைய மகன்கள் தங்களை புரிந்து கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு சில மகன்கள் தங்களுடைய தந்தைகளுக்கு தங்கள் மீது பாசமில்லை, நான் வீட்டிற்கு வந்து விட்டேனா என்று என்னுடைய அம்மாவிடமோ அல்லது தங்கையிடமோ கேட்கும் என்னுடைய தந்தை எனக்கே போன் செய்து நீ வீட்டிற்கு வந்து விட்டாயா? என்று கேட்டால் என்ன.. அவர்கள் ஏன் எங்களை இரண்டாம் பட்சமாக பார்க்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கு வழக்கம் போல கோபிநாத் நடுநிலைமையான தீர்ப்பு சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஒரு ப்ரோமோவில் ஒரு மகன் என்னுடைய அப்பா எனக்கு போன் பண்ணினாலே பணத்துக்காக தான் போன் பண்ணுறாரு என்று சொல்ல, அதற்கு அந்த மகனின் அப்பா 5000 சம்பளத்துக்கு நீ வேலைக்கு போக வேண்டான்னு என்னை சொல்லிட்ட, மாசம் 21க்கு மேல ஆகிடுச்சு அப்போ எனக்கு இருக்கிற கடனுக்கு என்ன பண்ணுறது.
அதுக்காக போன் பண்ணுனா தப்பா? என்று கேட்க அதற்கு அந்த மகன் நேரில் பேசும்போது வேற மாதிரி பேசுறாரு. போனில் பேசினால் பணம் மட்டும் கேட்கிறார். நீ நல்லா இருக்கிறியான்னு கூட கேக்குறது கிடையாது என்று கோபப்படுகிறார். அதற்கு கோபிநாத் போனில் நல்லா இருக்கிறியான்னு ஒரு வார்த்தை கேட்கலன்னு உங்களுக்குள்ள இருந்து ஒரு குரல் கேட்குல அந்த குரல் கிட்ட சொல்லுங்க இவருக்கு 68 வயசு ஆகிடுச்சு, அவருக்கு இவ்வளவு தான் தெரியும் என்று... இத்தனை நாட்களாக அவர் தானே பெற்று வளர்த்தது. இவ்வளவு நாளா அதை செஞ்சாரா? என்று யோசித்துப் பாருங்கள் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications